இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி..! லக்‌ஷ்மண் தேர்வு செய்த அணியுடன் முரண்படும் இர்ஃபான் பதான்

By karthikeyan VFirst Published Jul 12, 2021, 5:34 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு சென்றுள்ளது. ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணியில் இந்த தொடரில் ஆடுகிறது.

இந்திய இளம் வீரர்களுக்கு இந்த இலங்கை தொடர் ஓர் அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுமே ஆடும் லெவனில் தங்களுக்கான வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை லக்‌ஷ்மண் மற்றும் இர்ஃபான் பதான் தேர்வு செய்தனர். முதலில் விவிஎஸ் லக்‌ஷ்மண் தனது அணியை தேர்வு செய்தார்.

ஷிகர் தவான் - பிரித்வி ஷாவை தொடக்க வீரர்களாகவும், 3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் 4, 5ம் வரிசைகளில் முறையே சஞ்சு சாம்சன், மனீஷ் பாண்டே ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அவரது சகோதரரும் ஸ்பின் ஆல்ரவுண்டருமான க்ருணல் பாண்டியா ஆகிய இருவரையுமே தேர்வு செய்த லக்‌ஷ்மண், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாக குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரையும் தேர்வு செய்தார்.

விவிஎஸ் லக்‌ஷ்மண் தேர்வு செய்த இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய ஆடும் லெவன்:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

பிறகு தனது அணியை தேர்வு செய்த இர்ஃபான் பதான், லக்‌ஷ்மண் தேர்வு செய்த அணி சரிதான். ஆனால் அதில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்ய நான் விரும்புகிறேன் என்றார். ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டராகத்தான் எடுக்க வேண்டும். எனவே அவர் பந்துவீச வேண்டும். அவர் பந்துவீசும்பட்சத்தில் க்ருணல் பாண்டியா தேவையில்லை. க்ருணல் பாண்டியாவிற்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக நிதிஷ் ராணாவை எடுப்பேன் என்றார் இர்ஃபான் பதான்.

இர்ஃபான் பதான் தேர்வு செய்த இந்திய ஆடும் லெவன்:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
 

click me!