#IPL2022 ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும்..? ஆகாஷ் சோப்ரா அதிரடி

Published : Jul 12, 2021, 03:37 PM IST
#IPL2022 ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும்..? ஆகாஷ் சோப்ரா அதிரடி

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்துக்கு முன் ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசனின் 29 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர்  19 முதல் அக்டோபர் 15 வரை நடக்கவுள்ளது. ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலாக புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

மெகா ஏலம் நடக்கவிருப்பதால், அனைத்து அணிகளும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற அனைத்து வீரர்களையும் கழட்டிவிட வேண்டும். 

அந்தவகையில், இதுவரை ஒரு சீசனில் கூட ஐபிஎல் டைட்டிலை வென்றிராத ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

விராட் கோலி, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய 3 இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர் டிவில்லியர்ஸ் ஆகிய நால்வரை ஆர்சிபி தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

தேவ்தத் படிக்கல் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டதால், அவரை தக்கவைத்துக்கொள்வது ஆர்சிபிக்கு நல்லது. 

ஆர்டிஎம்(Right To Match)-ஐ ஜேமிசன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவருக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சோப்ரா தெரிவித்துள்ளார். ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் ஜேமிசனை ரூ.15 கோடிக்கும், மேக்ஸ்வெல்லை ரூ.14 கோடிக்கும் ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது.
 

PREV
click me!

Recommended Stories

Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?
சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!