#WIvsRSA 4வது டி20: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jul 1, 2021, 10:19 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4வது போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தென்னாப்பிரிக்கா வென்றது. 

டி20 தொடரையாவது வென்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன் டி20 தொடரில் ஆட ஆரம்பித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வென்றது. ஆனால் அடுத்த 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது.

தென்னாப்பிரிக்கா அணி 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில், 4வது டி20 இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது இந்த போட்டி. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

எவின் லெவிஸ், லெண்டில் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), பொல்லார்டு(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், ட்வைன் பிராவோ, ஃபேபியன் ஆலன், ஒபெட் மெக்காய், கெவின் சின்க்லெர்.

உத்தேச தென்னாப்பிரிக்க அணி:

ரீஸா ஹென்ரிக்ஸ், குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா(கேப்டன்), மார்க்ரம், வாண்டெர் டசன், டேவிட் மில்லர், , ஜார்ஜ் லிண்டே, ஆண்டில் ஃபெலுக்வாயோ, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, ஷாம்ஸி.
 

click me!