#WIvsSA சதத்தை தவறவிட்ட டி காக்.. மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி படுமட்டமா சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்

Published : Jun 20, 2021, 02:58 PM IST
#WIvsSA சதத்தை தவறவிட்ட டி காக்.. மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி படுமட்டமா சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டிலும் பேட்டிங்கில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  

தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிய, 2வது போட்டி செயிண்ட் லூசியாவில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, டி காக்கின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 298 ரன்களை குவித்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான எல்கர் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவர் 77 ரன்களில் ஆட்டமிழக்க, மார்க்ரம், வாண்டெர் டசன், கீகன் பீட்டர்சன் ஆகியோர் சரியாக ஆடாமல் ஒற்றை இலக்கம் அல்லது டக் அவுட் என வெளியேற, வெரெய்ன் 27 ரன்கள் அடித்தார்.

அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த குயிண்டன் டி காக், அபாரமாக ஆடி சதத்தை நெருங்கினார். ஆனால் 96 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார் டி காக். டி காக்கின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 298 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் போட்டியை போலவே இதிலும் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக பிளாக்வுட் 49 ரன்களும், அதற்கடுத்தபடியாக ஷாய் ஹோப் 43 ரன்களும் அடித்தனர். கைல் மேயர்ஸ் 12 ரன்னும், ஹோல்டர் 10 ரன்னும் அடிக்க, மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால், வெறும் 149 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சுருண்டது.

முதல் இன்னிங்ஸ் முடிவில் 149 ரன்கள் பின் தங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியிலும் தோற்று தொடரை இழப்பது உறுதி.
 

PREV
click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!