சர்வதேச கிரிக்கெட்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட ஆல்டைம் லெவன்..! வாசிம் ஜாஃபரின் தரமான தேர்வு

Published : Apr 17, 2022, 04:50 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட ஆல்டைம் லெவன்..! வாசிம் ஜாஃபரின் தரமான தேர்வு

சுருக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர்.   

சர்வதேச கிரிக்கெட்டில் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தும், பெரிதாக போற்றப்படாமல் போன வீரர்கள் ஏராளம்.

மிகச்சிறந்த கிரிக்கெட் கெரியரை பெற்றிருந்தும், அப்படி குறைத்து மதிப்பிடப்பட்ட 11 வீரர்களை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர். 

தனது ஆல்டைம் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்களை கொண்ட அணியின் தொடக்க வீரர்களாக ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர் மற்றும் இந்தியாவின் ஷிகர் தவான் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

இலங்கையின் அதிரடி வீரர் திலகரத்னே தில்ஷானை 3ம் வரிசை வீரராக தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர். அவர்தான் விக்கெட் கீப்பரும் கூட. பாகிஸ்தானின் லெஜண்ட் கிரிக்கெட்டர் யூனிஸ் கானை 4ம் வரிசையிலும், வெஸ்ட் இண்டீஸின் சந்தர்பாலை 5ம் வரிசையிலும், ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரரான மைக் ஹசியையும் தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர். ஆல்ரவுண்டர்களாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பால் காலிங்வுட் மற்றும் பாகிஸ்தானின் அப்துல் ரசாக் ஆகிய இருவரையும், ஸ்பின்னராக ரங்கனா ஹெராத்தையும், ஃபாஸ்ட் பவுலர்களாக சமிந்தா வாஸ் மற்றும் ரியான் ஹாரிஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த ஆல்டைம் குறைத்து மதிப்பிட்ட 11 வீரர்கள்:

மார்க் டெய்லர் (கேப்டன்), ஷிகர் தவான், திலகரத்னே தில்ஷான் (விக்கெட் கீப்பர்), யூனிஸ் கான், ஷிவ்நரைன் சந்தர்பால், மைக் ஹசி, பால் காலிங்வுட், அப்துல் ரசாக், ரங்கனா ஹெராத், சமிந்தா வாஸ், ரியான் ஹாரிஸ்.

12வது வீரர் ரோஸ் டெய்லர்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!