வாசிம் ஜாஃபரின் ஆல்டைம் சிறந்த உலக லெவன்..! ஷேன் வார்ன் கேப்டன்

Published : Apr 14, 2022, 08:23 PM IST
வாசிம் ஜாஃபரின் ஆல்டைம் சிறந்த உலக லெவன்..! ஷேன் வார்ன் கேப்டன்

சுருக்கம்

வாசிம் ஜாஃபர் ஆல்டைம் சிறந்த உலக லெவனை தேர்வு செய்துள்ளார். தனது ஆல்டைம் லெவனின் கேப்டனாக ஷேன் வார்னை தேர்வு செய்துள்ளார்.  

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த, நேர்த்தியான 11 வீரர்களை தேர்வு செய்து அணியை உருவாக்கியுள்ளார்.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக தென்னாப்பிரிக்காவின் பாரி ரிச்சர்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர். தென்னாப்பிரிக்காவுக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ரிச்சர்ட்ஸின் சராசரி 72.57 ஆகும். மார்க் வாக் ஆஸ்திரேலியாவிற்காக 370 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.

3ம் வரிசை வீரராக விவியன் ரிச்சர்ட்ஸ், 4ம் வரிசை வீரராக யுவராஜ் சிங், 5ம் வரிசை வீரராக ஆஸ்திரேலியாவின் க்ரேக் சேப்பல் ஆகிய மூவரையும், ஆல்ரவுண்டர்களாக கேரி சோபர்ஸ், இம்ரான் கான் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலிய லெஜண்ட் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட்டையும், ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம் மற்றும் மால்கோம் மார்ஷல் ஆகிய இருவரையும், ஸ்பின்னராக லெஜண்ட் ரிஸ்ட் ஸ்பின்னர் ஷேன் வார்னையும் தேர்வு செய்துள்ள வாசிம் ஜாஃபர், ஷேன் வார்னை கேப்டனாக நியமித்துள்ளார்.

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த, நேர்த்தியான உலக லெவன்:

பாரி ரிச்சர்ட்ஸ், மார்க் வாக், விவியன் ரிச்சர்ட்ஸ், யுவராஜ் சிங், க்ரேக் சேப்பல், கேரி சோபர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட் (விக்கெட் கீப்பர்), இம்ரான் கான், ஷேன் வார்ன் (கேப்டன்), வாசிம் அக்ரம், மால்கோம் மார்ஷல்.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!