இந்திய முன்னாள் வீரரின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்..! அருமையான தேர்வு

By karthikeyan VFirst Published Jun 27, 2020, 10:10 PM IST
Highlights

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் லெவனை பார்ப்போம். 
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்காத நிலையில், முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் ஆல்டைம் லெவனை தேர்வு செய்தும், ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடியும் வருகின்றனர். 

அந்தவகையில், வாசிம் ஜாஃபர் ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த ஐபிஎல் அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸின் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் இந்திய அணியின் தொடக்க வீரரும் நான்கு முறை ஐபிஎல் டைட்டிலை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.

மூன்றாம் வரிசையில் சுரேஷ் ரெய்னாவையும் நான்காம் வரிசை வீரராக விராட் கோலியையும் தேர்வு செய்துள்ள வாசிம் ஜாஃபர், ஐந்தாம் வரிசை வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் தோனியை தேர்வு செய்துள்ளார். சிஎஸ்கே அணியை 8 முறை ஐபிஎல் ஃபைனலுக்கு அழைத்து சென்றதுடன், 3 முறை கோப்பையை வென்ற வெற்றிகரமான கேப்டனான தோனியைத்தான் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார்.

அதிரடி ஆல்ரவுண்டர்களாக ஆண்ட்ரே ரசல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர், ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் மலிங்கா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 12வது வீரராக ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார்.

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த ஆல்டைம் பெஸ்ட் ஐபிஎல் அணி:

கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், அஷ்வின், பும்ரா, மலிங்கா.

12வது வீரர் - ஜடேஜா.
 

click me!