அஷ்வினை விட கண்டிப்பா அவருதான் பெஸ்ட் டெஸ்ட் ஸ்பின்னர்..! வெளிநாட்டு வீரரை உயர்வாக மதிப்பிட்ட முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Jun 27, 2020, 8:38 PM IST
Highlights

அஷ்வின் - நேதன் லயன் ஆகிய இருவரில் யார் சிறந்த டெஸ்ட் ஸ்பின்னர் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டில் விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித்திற்கு இடையே யார் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற போட்டி நடப்பதை போலவே, அஷ்வின் மற்றும் நேதன் லயன் ஆகிய இருவருக்கும் இடையே யார் சிறந்த ஸ்பின்னர் என்ற போட்டியும் ஒப்பீடும் நடக்கிறது.

சமகால கிரிக்கெட்டின் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் ஆகிய இருவரும் திகழ்கின்றனர். அஷ்வின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டாலும், டெஸ்ட் அணியின் நட்சத்திர ஸ்பின்னராக அஷ்வின் ஜொலிக்கிறார். அதிவேக 250, 300, 350 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார். 

2010ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான அஷ்வின், இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளிலும் 111 ஒருநாள் போட்டிகளிலும் 46 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2017ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஷ்வின் ஆடவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடிவரும் அஷ்வின், டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார். 

ஆனாலும் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய துணைக்கண்ட நாடுகளில் ஆடும்போது மட்டுமே இந்திய டெஸ்ட் அணியில் அஷ்வின் முதன்மை ஸ்பின்னராக எடுக்கப்படுகிறாரே, ஆசியாவிற்கு வெளியே, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆடும்போது, ஜடேஜா பிரைம் ஸ்பின்னராக எடுக்கப்படுகிறார். 

அஷ்வினை போலவே ஆஸ்திரேலியாவின் ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயன் மிகச்சிறந்த ஆஃப் ஸ்பின்னர். டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லா நாடுகளிலும் அசத்துகிறார் நேதன் லயன். நேதன் லயன் ஆஸ்திரேலிய அணிக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

அவர்கள் இருவரில் யார் சிறந்த ஸ்பின்னர் என்ற விவாதம் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, நான் நேதன் லயன் தான் சிறந்தவர் என்பேன். குறிப்பாக அண்மைக்காலமாக நேதன் லயன் அபாரமாக வீசிவருகிறார். லயனின் பவுலிங் ஆக்‌ஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது பவுலிங் நன்றாக பவுன்ஸ் ஆகும். ஸ்பின்னிற்கு கொஞ்சம் கூட ஒத்துழைக்காத ஆடுகளங்களில் கூட, அருமையாக வீசுகிறார் நேதன் லயன்.

இந்தியா மாதிரியான ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமான கண்டிஷன்களில் அஷ்வின் விக்கெட் எடுக்க கொஞ்சம் தாமதமாகும். ஆனால் நேதன் லயன் உடனடியாக விக்கெட் வீழ்த்திவிடுவார். எந்தவிதமான எதிரணிக்கு எதிராகவும் தொடர்ச்சியாக சிறப்பாக வீசிவருகிறார் லயன் என்று ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டினார். 

click me!