டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? வாசிம் அக்ரம் அதிரடி

Published : May 27, 2021, 05:56 PM IST
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? வாசிம் அக்ரம் அதிரடி

சுருக்கம்

டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்ல வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.  

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ளது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடப்பது சந்தேகமாகியுள்ளது.

டி20 உலக கோப்பை எந்த நாட்டில் நடத்தப்படும் என்பது குறித்து ஐசிசி - பிசிசிஐ பேசி முடிவெடுக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் வலுவான அணிகளாக திகழ்கின்றன. உலக கோப்பை மிகக்கடுமையான போட்டிகள் நிறைந்தவைகளாக இருக்கும்.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள வாசிம் அக்ரம், இந்தியா தான் கண்டிப்பாக வெல்வதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும் அணி. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பயமில்லாத துணிச்சலான கிரிக்கெட் ஆடிவருகிறது.

இங்கிலாந்து அணியும் சிறப்பாக ஆடிவருகிறது. நியூசிலாந்தும் வலுவாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை கணிக்கவே முடியாது. அந்த அணியின் முக்கியமான வீரர்கள் ஜொலித்தால், மிரட்டிவிடுவார்கள் என்று வாசிம் அக்ரம் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி