தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்த லக்‌ஷ்மண்

By karthikeyan VFirst Published Dec 6, 2021, 10:10 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார் விவிஎஸ் லக்‌ஷ்மண்.
 

நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி குறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள லக்‌ஷ்மண், நன்றாக ஆடும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்பளிப்பது அவசியம். அணி தேர்வில் தொடர்ச்சி மிக முக்கியம். அந்தவகையில் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும். ரஹானே சரியாக ஆடவில்லை. எனவே ரஹானேவை ஆடும் லெவனில் எடுக்கக்கூடாது. புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் இந்திய அணியில் எடுக்கப்பட வேண்டும். ஆனால் ரஹானேவிற்கு ஆடும் லெவனில் இடமளிக்கக்கூடாது. ஹனுமா விஹாரியை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும்.

இந்திய அணி 5 பேட்ஸ்மேன்களுடன் ஆடும். 6வது வீரர் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட். ஆல்ரவுண்டராக ஜடேஜா ஆடுவார். 3 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் என லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

click me!