சர்வதேச கிரிக்கெட்டின் முதல் வீரர்.. வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி..!

By karthikeyan VFirst Published Dec 6, 2021, 9:04 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் 50 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். கடைசியாக அவர் சதமடித்து 2 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அவரது சாதனைப்பயணம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி. அடுத்ததாக ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டு, டெஸ்ட் அணியின் கேப்டனாக மட்டுமே தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே 50க்கும் அதிகமான வெற்றிகளை, ஒரு வீரராக பெற்றுள்ள விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 50 வெற்றிகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் பெற்ற வெற்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 50வது வெற்றி.

இதன்மூலம், சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து ஃபார்மட்டுகளிலும் 50 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 97 போட்டிகளில் 50 வெற்றிகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 254 போட்டிகளில் 153 வெற்றிகள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 95 போட்டிகளில் 59 வெற்றிகள்.

click me!