டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணி..! விவிஎஸ் லக்‌ஷ்மணின் அதிரடி தேர்வு

By karthikeyan VFirst Published Oct 20, 2021, 6:15 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியை விவிஎஸ் லக்‌ஷ்மண் தேர்வு செய்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்வதால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியிருந்த நிலையில், டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் மோதுகின்றன.

வரும் 23ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டி குறித்து பலரும் கருத்து கூறிவருகின்றனர். அந்தவகையில், பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்துவரும் நிலையில், விவிஎஸ் லக்‌ஷ்மணும் தேர்வு செய்துள்ளார்.

தொடக்க வீரர்கள் - ரோஹித் சர்மா, ராகுல்.
3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ்.
விக்கெட் கீப்பர் - ரிஷப் பண்ட்
ஃபினிஷர் - ஹர்திக் பாண்டியா
ஸ்பின் ஆல்ரவுண்டர் - ஜடேஜா
ஃபாஸ்ட் பவுலர்கள் - புவனேஷ்வர் குமார், பும்ரா
ஸ்பின்னர்கள் - ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி

இதையும் படிங்க - ரஷீத் கானை கவர்ந்த இந்திய இளம் ஸ்பின்னர் இவர் தான்..! தம்பி பட்டைய கிளப்புறான் என புகழாரம்

லக்‌ஷ்மண் தேர்வு செய்த இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி.
 

click me!