ரஷீத் கானை கவர்ந்த இந்திய இளம் ஸ்பின்னர் இவர் தான்..! தம்பி பட்டைய கிளப்புறான் என புகழாரம்

By karthikeyan VFirst Published Oct 20, 2021, 3:54 PM IST
Highlights

தன்னை கவர்ந்த இளம் ஸ்பின்னர் யார் என்று உலகின் முன்னணி ஸ்பின்னரான ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் கூறியுள்ளார்.
 

சமகாலத்தின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் முதன்மையானவராக திகழ்கிறார் ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக 5 டெஸ்ட், 74 ஒருநாள் மற்றும் 51 டி20 போட்டிகளில் ஆடி முறையே 34, 140 மற்றும் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரஷீத் கான், ஐபிஎல் உட்பட உலகின் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ஆடிவருகிறார்.

சமகாலத்தின் சிறந்த ஸ்பின்னராக, உலகம் முழுதும் கிரிக்கெட் ஆடி அனைவரையும் கவர்ந்த ரஷீத் கான், சமகாலத்தில் தன்னை கவர்ந்த ஸ்பின்னர்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரஷீத் கான், முதல் நபர் யுஸ்வேந்திர சாஹல். இந்தியாவிற்காவும் ஆர்சிபிக்காகவும் அருமையாக ஆடிவருகிறார். ஷதாப் கானின் பவுலிங்கை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். இஷ் சோதி நிறைய மேம்பட்டிருக்கிறார். ஆடம் ஸாம்பாவும் அருமையாக வீசுகிறார்.

இதையும் படிங்க -  #T20WorldCup அந்த அணி தான் ஃபேவரைட்ஸ்.. இந்தியாவை ஏன் ஃபேவரைட்ஸ்னு சொல்றாங்கனு புரியல - மைக்கேல் வான்

ஆனால் என்னை மிகவும் கவர்ந்த இளம் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் தான். கடந்த 2 ஆண்டுகளில் நிறைய மேம்பட்டிருக்கிறார். கடந்த ஐபிஎல்லின் போது, லைன் & லெந்த் தொடர்பாக அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். இந்த ஐபிஎல்லின் போது, என்னிடம் வந்து பேசிய பிஷ்னோய், நீங்கள்(ரஷீத்) கொடுத்த அறிவுரைகளை பின்பற்றினேன்; பெரியளவில் பயன்பட்டது என்று  என்னிடம் கூறினார்.

பிஷ்னோய் பந்துவீசும் எனர்ஜியை பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். இதைவிட எல்லாம் முக்கியமானது என்னவென்றால், பிஷ்னோய் அவரது பவுலிங்கை ரசித்து மகிழ்ந்து வீசுகிறார் என்று ரஷீத் கான் தெரிவித்தார்.

ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடும் இளம் ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய், அவரது அபாரமான பவுலிங்கின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அருமையாக வீசி அந்த அணியின் வெற்றிகளுக்கு பங்களிப்பு செய்திருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 14வது சீசனில் 9 போட்டிகளில் ஆடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!