#T20WorldCup இந்திய அணியின் ஆடும் 11ல் புவனேஷ்வர் குமாருக்கு பதில் அவரை இறக்கிவிடுங்க! பார்த்திவ் படேல் அதிரடி

Published : Oct 20, 2021, 04:16 PM IST
#T20WorldCup இந்திய அணியின் ஆடும் 11ல் புவனேஷ்வர் குமாருக்கு பதில் அவரை இறக்கிவிடுங்க! பார்த்திவ் படேல் அதிரடி

சுருக்கம்

டி20 உலக கோப்பை தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து பார்த்திவ் படேல் கருத்து கூறியுள்ளார்.  

டி20 உலக கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. வரும் 22ம் தேதி வரை தகுதிச்சுற்று போட்டிகள் நடக்கின்றன. 23ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று தொடங்குகிறது. 24ம் தேதி இந்திய அணி அதன் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி டிராபியை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணி, அனுபவமும் இளமையும் கலந்த வலுவான அணியாக திகழ்கிறது. இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் மிக முக்கியம். எந்த 11 வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கப்போகிறது என்பது மிக முக்கியம். அந்தவகையில், இதுகுறித்து முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் கருத்து கூறியுள்ளார்.

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - கேஎல் ராகுல், 3ம் வரிசையில் கேப்டன் விராட் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஃபினிஷராக ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆடுவார்கள். ஸ்பின்னர்களாக ஜடேஜாவும் ராகுல் சாஹரும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமியும், பும்ராவும் ஆடுவார்கள்.

ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், பும்ரா, ஷமி ஆகிய 10 வீரர்களும் ஆடுவது உறுதி. 11வது வீரராக, ஃபார்மில் இல்லாத புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூரை ஆடவைக்கலாம் என்று பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!