#SLvsIND இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி..! விவிஎஸ் லக்‌ஷ்மண் தேர்வு செய்துள்ள இந்தியா ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jul 6, 2021, 9:17 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை விவிஎஸ் லக்‌ஷ்மண் தேர்வு செய்துள்ளார்.
 

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி வரும் 13ம் தேதி இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. விராட் கோலி தலைமையிலான மெயின் இந்திய அணி இங்கிலாந்தில் இருப்பதால் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ள நிலையில், வரும் 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டியில் ஆடுகிறது.

ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லாத இளம் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்ளவுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் விவிஎஸ் லக்‌ஷ்மண்.

ஷிகர் தவானுடன் பிரித்வி ஷாவை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். 3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவையும், விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனையும் தேர்வு செய்த லக்‌ஷ்மண், 5ம் வரிசையில் மனீஷ் பாண்டேவையும், ஆல்ரவுண்டர்களாக பாண்டியா பிரதர்ஸையும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரையும், ஸ்பின்னர்களாக குல்தீப் - சாஹலையும் தேர்வு செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான விவிஎஸ் லக்‌ஷ்மண் தேர்வு செய்த இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
 

click me!