#SLvsIND ஒருநாள் தொடர்: முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த இந்திய அணி

Published : Jul 13, 2021, 10:32 PM IST
#SLvsIND ஒருநாள் தொடர்: முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த இந்திய அணி

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை விவிஎஸ் லக்‌ஷ்மண் மற்றும் இர்ஃபான் பதான் ஆகிய இருவரும் தேர்வு செய்துள்ளனர்.  

ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு சென்றுள்ளது. ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணியில் இந்த தொடரில் ஆடுகிறது.

இந்திய இளம் வீரர்களுக்கு இந்த இலங்கை தொடர் ஓர் அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுமே ஆடும் லெவனில் தங்களுக்கான வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை லக்‌ஷ்மண் மற்றும் இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ளனர்.

விவிஎஸ் லக்‌ஷ்மண் தேர்வு செய்த இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

இர்ஃபான் பதான் தேர்வு செய்த இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!