டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தணும்னா இதை மட்டும் செய்யுங்க போதும்.. டெஸ்ட் ஜாம்பவான் லட்சுமணன் அறிவுரை

By karthikeyan VFirst Published Feb 18, 2020, 5:15 PM IST
Highlights

சொந்த மண்ணில் ஆடும் நியூசிலாந்தை டெஸ்ட் தொடரில் வீழ்த்த வேண்டுமென்றா, என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரையை டெஸ்ட் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன் வழங்கியுள்ளார். 
 

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி வென்றது. 

அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால், இரு அணிகளுமே தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளன. ஏற்கனவே 360 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் கோலோச்சும் இந்திய அணி, கூடுதலாக 120 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் நீடிக்கும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழந்துவிடக்கூடாது என்ற உறுதியில் நியூசிலாந்து அணி உள்ளது. 

சொந்த மண்ணில் ஆடுவது நியூசிலாந்துக்கு கூடுதல் பலம். ஆனாலும் இந்திய அணியில் புஜாரா, கோலி, ரஹானே, இஷாந்த் சர்மா, அஷ்வின், ஜடேஜா ஆகிய அனுபவ வீரர்களும், நியூசிலாந்தில் ஆடிய அனுபவம் கொண்ட பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகிய இளம் வீரர்களும் உள்ளனர். பும்ரா, ஷமி என இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கும் சிறப்பாகவே உள்ளது. 

Also Read - ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய 3 பேட்ஸ்மேன்கள் இவங்கதான்.. இன்சமாம் உல் ஹக் அதிரடி

ஆனாலும் சொந்த மண்ணில் வலுவான நியூசிலாந்து அணியை வீழ்த்துவதற்கு என்னை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை லட்சுமணன் வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள லட்சுமணன், இந்திய அணியின் தொடக்க வீரர்களுக்குத்தான் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. மயன்க் அகர்வாலுக்கு ஒருநாள் தொடர் சரியாக அமையவில்லை. அவருடன் தொடக்க வீரராக இறங்கப்போவது பிரித்வி ஷாவோ அல்லது ஷுப்மன் கில்லோ இருவரில் யாராக இருந்தாலும், இருவருமே இளம் வீரர்கள், அனுபவம் இல்லாதவர்கள். சொந்த மண்ணில் ஆடும் அணி மீது நாம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றால், முதல் இன்னிங்ஸில் அதிகமாக ஸ்கோர் செய்ய வேண்டும். முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோரை அடித்தால் மட்டுமே நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார். 
 

click me!