TNPL 2022: விஷால் வைத்யா அபாரமான பேட்டிங்.! திருப்பூர் தமிழன்ஸை அசால்ட்டா வீழ்த்தி திண்டுக்கல் அணி அபார வெற்றி

Published : Jul 04, 2022, 11:05 PM IST
TNPL 2022: விஷால் வைத்யா அபாரமான பேட்டிங்.! திருப்பூர் தமிழன்ஸை அசால்ட்டா வீழ்த்தி திண்டுக்கல் அணி அபார வெற்றி

சுருக்கம்

திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.  

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதிய டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சித்தார்த் (0) மற்றும் அனிருதா (8) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர்.  3ம் வரிசையில் இறங்கிய எஸ்.அரவிந்த் சிறப்பாக ஆடி 32 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க - டெஸ்ட் கிரிக்கெட்டில் லக்‌ஷ்மண், கம்பீர் ஆகிய ஜாம்பவான்களை அசால்ட்டா தூக்கியடித்து ரிஷப் பண்ட் அபார சாதனை

மான் பஃப்னா 21 பந்தில் 21 ரன்கள் மட்டுமே அடித்தார். பின்வரிசையில் இறங்கிய எம் முகமது 18 பந்தில் 27 ரன்களும், கிறிஸ்ட் 20 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 145 ரன்கள் அடித்து, திண்டுக்கல் டிராகன்ஸுக்கு 146 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருப்பூர் தமிழன்ஸ் அணி.

146 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர் விஷால் வைத்யா அபாரமாக பேட்டிங் ஆடினார். அவரும் ஹரி நிஷாந்த்தும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 66 ரன்களை சேர்த்தனர். ஹரி நிஷாந்த் 25 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் விஷாலுடன் மணிபாரதி ஜோடி சேர்ந்தார். 

இதையும் படிங்க - கிரிக்கெட்டை தாண்டி விம்பிள்டன் டென்னிஸ் வரை சென்ற வாத்தி கம்மிங்..! ரோஜர் ஃபெடரருக்கு போட்ட கேப்ஷன் வைரல்

மணிபாரதி விஷாலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட, அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த விஷால் வைத்யா 57 பந்தில் 84 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்துகொடுத்தார். அவரது அதிரடியால் 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

PREV
click me!

Recommended Stories

இங்கிலாந்தை கதறவிட்ட ஹெட் 'மாஸ்டர்'.. அட்டகாசமான சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி