டெஸ்ட் கிரிக்கெட்டில் லக்‌ஷ்மண், கம்பீர் ஆகிய ஜாம்பவான்களை அசால்ட்டா தூக்கியடித்து ரிஷப் பண்ட் அபார சாதனை

By karthikeyan VFirst Published Jul 4, 2022, 8:40 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக லக்‌ஷ்மண் மற்றும் கம்பீர் ஆகிய மிகப்பெரிய ஜாம்பவான்களை விட அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பண்ட்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட் (146) மற்றும் ரவீந்திர ஜடேஜா (104) ஆகிய இருவரின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அபாரமான சதத்தால்(106) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது.

132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் புஜாரா (66) மற்றும் ரிஷப் பண்ட்(57) ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சோபிக்காததால் 2வது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா. இந்திய அணி மொத்தமாக 377 ரன்கள் முன்னிலை பெற, 378 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டிவருகிறது. 

இதையும் படிங்க - மனைவி சாக்‌ஷியுடன் 12ம் ஆண்டு திருமண நாளை லண்டனில் கொண்டாடும் தோனி

இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக திகழும் ரிஷப் பண்ட், டி20 கிரிக்கெட்டில் சொதப்பினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் 2 சதம், ஆஸ்திரேலியாவில் ஒரு சதம், தென்னாப்பிரிக்காவில் ஒரு சதம் என இந்திய விக்கெட் கீப்பராக பல்வேறு சாதனைகளை புரிந்துவருகிறார். 

இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 203 ரன்களை குவித்த ரிஷப் பண்ட், வெளிநாட்டில் ஒரு டெஸ்ட்  போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். 1953ம் ஆண்டு விஜய் மஞ்சரேக்கர் கிங்ஸ்டனில் அடித்த 161 ரன்கள் என்ற சாதனையை 69 ஆண்டுகளுக்கு பிறகு தகர்த்தார் ரிஷப் பண்ட்.

இதையும் படிங்க - கிரிக்கெட்டை தாண்டி விம்பிள்டன் டென்னிஸ் வரை சென்ற வாத்தி கம்மிங்..! ரோஜர் ஃபெடரருக்கு போட்ட கேப்ஷன் வைரல்

இந்நிலையில், மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பண்ட். இந்த போட்டியில் அடித்த 203 ரன்களுடன் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக மொத்தமாக 770 ரன்களை குவித்துள்ளார் ரிஷப் பண்ட். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்களை குவித்ததில், விவிஎஸ் லக்‌ஷ்மண் மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய இருவரையும் முந்தியுள்ளார் ரிஷப் பண்ட்.

கௌதம் இங்கிலாந்துக்கு எதிராக 12 டெஸ்ட் போட்டிகளில் 768 ரன்களையும், விவிஎஸ் லக்‌ஷ்மண்  17  டெஸ்ட் போட்டிகளில் 766 ரன்களையும் குவித்துள்ள நிலையில், அந்த இருபெரும் ஜாம்பவான்களையும் முந்தி சாதனை படைத்துள்ளார் ரிஷப் பண்ட்.
 

click me!