இப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டீங்களே ரோஹித்..! ஹிட்மேனின் முடிவை கடுமையாக விமர்சித்த சேவாக்

By karthikeyan VFirst Published Apr 24, 2021, 9:03 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவை 3ம் வரிசையில் இறக்காமல் இஷான் கிஷனை இறக்கிவிட்டதற்காக ரோஹித் சர்மாவை விமர்சித்துள்ளார் சேவாக்.
 

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி, ரோஹித் சர்மா அரைசதம்(63) அடித்தும் கூட, 20 ஓவரில் வெறும் 131 ரன்கள் மட்டுமே அடித்தது. 132 ரன்கள் என்ற எளிய இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி அசால்ட்டாக அடித்து அபார வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் குயிண்டன் டி காக் அவுட்டான பின்னர், மும்பை அணியின் வழக்கமான 3ம் வரிசை வீரர் சூர்யகுமார் யாதவ் 3ம் வரிசையில் பேட்டிங் ஆட வராமல், இஷான் கிஷன் வந்தார். முதல் 4 போட்டிகளில் அபாரமாக ஆடியிருந்த சூர்யகுமார் இறக்கப்படாமல், முதல் 4 போட்டிகளில் சோபிக்காத இஷான் கிஷன் 3ம் வரிசையில் பேட்டிங் ஆட வந்தார்.

ஆனால் பவர்ப்ளேயில் பெரிய ஷாட்டுகளை ஆடி வேகமாக ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிய இஷான் கிஷன், படுமந்தமாக ஆடி 17 பந்தில் வெறும் 6 ரன் மட்டுமே அடித்தார். அதனால் மும்பை அணி பவர்ப்ளேயில் வெறும் 21 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இஷான் கிஷன் வீணடித்த பந்துகளை அதிரடியாக ஆடி சரிசெய்துவிட்டு போகாமல், 17 பந்தில் 6 ரன் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித்தும் சூர்யகுமாரும் அடித்து ஆடினாலும் கூட, ஓரளவிற்கு மேல் ஸ்கோரை உயர்த்த முடியவில்லை.

இந்நிலையில், ரோஹித் சர்மாவின் இந்த மூவ் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இதுகுறித்து பேசிய சேவாக், 4 போட்டிகளில் சரியாக ஆடாத ஒரு வீரரை(இஷான் கிஷன்) 3ம் வரிசையில் இறக்குகிறீர்கள். அதுவும் யாருக்கு பதிலாக.. முதல் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் சிறப்பாக ஆடிய, நல்ல ஃபார்மில் இருக்கக்கூடிய சூர்யகுமாருக்கு பதிலாக.. அது தவறு.

சூர்யகுமார் யாதவ் பவர்ப்ளேயில் களத்திற்கு வந்திருந்தால் அடித்து ஆடியிருப்பார். மும்பை அணியின் முமெண்டம் பாதிக்கப்பட்டிருக்காது. மும்பை அணிக்கு ஒரேயொரு நல்ல விஷயம் என்னவென்றால், ரோஹித்தும் சுர்யகுமாரும் இணைந்து 15-16 ஓவர் வரை ஆடியது மட்டும்தான் என்று சேவாக் ரோஹித்தின் முடிவை விமர்சித்துள்ளார்.
 

click me!