பும்ராவைவிட அந்த பையன் திறமையான ஃபாஸ்ட் பவுலர்..! இளம் பவுலருக்கு நெஹ்ரா புகழாரம்

By karthikeyan VFirst Published Apr 24, 2021, 5:00 PM IST
Highlights

பவுலிங் திறமையின் அடிப்படையில், பும்ராவைவிட முகமது சிராஜ் மிகச்சிறந்த பவுலர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஆஷிஸ் நெஹ்ரா.
 

வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன், துல்லியமான பவுலிங், மிரட்டலான வேகம் என ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியில் இடம்பிடித்த ஜஸ்ப்ரித் பும்ரா, தற்போது சமகால கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் தலைசிறந்த பவுலராக திகழ்கிறார்.

3 விதமான போட்டிகளிலும் அபாரமாக பந்துவீசி சிறந்த பவுலராக வலம்வருகிறார் பும்ரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்த பும்ரா, 19 டெஸ்ட், 67 ஒருநாள் மற்றும் 49 டி20 போட்டிகளில் ஆடி மொத்தமாக 250 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 97 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 113 விக்கெட்டுகளை விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், லெஜண்ட் பவுலரான பும்ராவைவிட முகமது சிராஜ் திறமையில் சிறந்தவர் என்று ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார். கிரிக்பஸ் இணையதளத்தில் சிராஜ் குறித்து பேசிய நெஹ்ரா, பவுலர்களை பொறுத்தமட்டில் அனைவரும் பும்ராவை பற்றியே பேசுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தமட்டில், திறமையின் அடிப்படையில் பும்ராவைவிட முகமது சிராஜ் சிறந்த பவுலர்.

2 ஆண்டுகளுக்கு முன் சிராஜ் பரபரப்பாக பேசப்பட்டார். இந்தியா ஏ அணிக்காக சிவப்பு பந்தில் ஒவ்வொரு போட்டியிலும் 5-6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சிராஜ். சிவப்பு பந்தில் சிறப்பாக வீசும் ஒரு பவுலர் கண்டிப்பாக வெள்ளைப்பந்தில் மிகச்சிறப்பாக வீசுவார். அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் சிராஜ் மிகச்சிறந்த பவுலர். நல்ல வேரியேஷன் வைத்திருக்கிறார், திறமையில் கொஞ்சம் கூட குறையில்லை. வேரியேஷனை பொறுத்தமட்டில் பும்ராவைவிட சிறந்த பவுலர் சிராஜ் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!