அந்த விஷயத்துல விராட் கோலி அப்படியே சச்சின் டெண்டுல்கர் மாதிரி..! சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 10, 2021, 5:37 PM IST
Highlights

வெவ்வேறு கேப்டன்களுக்கு கீழ் ஆடியதில் விராட் கோலி, அப்படியே சச்சின் டெண்டுல்கர் மாதிரி என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
 

தோனியின் கேப்டன்சியில் 2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான விராட் கோலி, 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆனார். 2017ம் ஆண்டு தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டன்சியையும் ஏற்றார்.

இதையும் படிங்க - 5 முறை ஐபிஎல் கோப்பை ஜெயிச்சதுலாம் மேட்டரே இல்ல..! இந்திய டி20 கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை

தோனியின் கேப்டன்சியில் அறிமுகமான விராட் கோலி, பிற்காலத்தில் தோனி இருக்கும் அணியையே வழிநடத்தினார் கோலி. இந்நிலையில், டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து கோலி விலக, அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிகளின் துணை கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, கோலியின் விலகலுக்கு பிறகு, இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுல் துணை கேப்டனாக செயல்படவுள்ளார். விரைவில் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒருநாள் அணியின் கேப்டன்சியையும் ரோஹித் சர்மா ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - இந்திய கிரிக்கெட்டுக்கு உங்கள் பங்களிப்பு அளப்பரியது..! ரவி சாஸ்திரிக்கு விராட் கோலியின் ஃபேர்வெல் போஸ்ட்

இந்நிலையில், வெவ்வேறு கேப்டன்களுக்கு கீழ் ஆடுவதில், விராட் கோலி சச்சின் டெண்டுல்கர் மாதிரி என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்

இதுகுறித்து க்ரிக்பஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் பேசிய வீரேந்திர சேவாக், இந்திய அணிக்கு புதிய கேப்டன் மற்றும் துணை கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி கேப்டனாக இல்லையென்றாலும், ஒரு சீனியர் வீரர் என்ற முறையிலும் முன்னாள் கேப்டன் என்ற முறையிலும் கண்டிப்பாக அவரது ஆலோசனைகளை வழங்குவார்.

இதையும் படிங்க - IPL 2022 சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன்; தோனிக்கு மாற்று வீரர் இவரா? சோஷியல் மீடியா மூலம் பரபரப்பை கிளப்பிய வீரர்

சச்சின் டெண்டுல்கரும் அவரது நீண்ட கிரிக்கெட் கெரியரில் நிறைய கேப்டன்களுக்கு கீழ் ஆடியிருக்கிறார். எந்த கேப்டனுக்கு கீழ் ஆடினாலும், சச்சின் டெண்டுல்கர் அவரது கருத்துகளை கேப்டன்களிடம் கூறுவார். அதை செயல்படுத்துவம் செயல்படுத்தாதும் கேப்டன்களின் முடிவு. ஆனால் சச்சின் அவரது ஆலோசனைகளை தெரிவிப்பார். அதேபோலத்தான் விராட் கோலியும். சச்சின் செய்ததை போல கோலியும் செய்வார். அதனால் தான் நாங்கள் இருவருமே லீடர்கள் என்று கோலி கூறினார். இவர்கள் இளம் வீரர்களுக்கு மட்டுமல்லாது கேப்டன்களுக்கும் உதவிகரமாக இருப்பார்கள் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - நீங்க சொல்றது ஒண்ணும் செய்றது ஒண்ணுமா-வுல இருக்கு..! இந்திய அணி தேர்வை கடுமையாக விளாசிய ஹர்பஜன் சிங்

click me!