இந்திய கிரிக்கெட்டுக்கு உங்கள் பங்களிப்பு அளப்பரியது..! ரவி சாஸ்திரிக்கு விராட் கோலியின் ஃபேர்வெல் போஸ்ட்

By karthikeyan VFirst Published Nov 10, 2021, 3:26 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக விராட் கோலி பதிவிட்ட சமூகவலைதள பதிவு வைரலாகிவருகிறது.
 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரவி சாஸ்திரிக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததன் விளைவாகவும், சாஸ்திரி பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டதன் விளைவாகவும், 2019ம் ஆண்டுக்கு பிறகும் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

அதற்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கும் கோலிக்கும் இடையே நல்ல புரிதல் இல்லை. ஆனால் ரவி சாஸ்திரிக்கும் கோலிக்கும் நன்றாக செட் ஆகிவிட்டது. இருவரும் இணைந்து 4 ஆண்டுகள் பரஸ்பர புரிதலுடன் இந்திய கிரிக்கெட்டுக்காக சிறப்பான பங்களிப்பை செய்தனர்.

ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ், இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் (2018-2019) டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்ததுடன், 2020-2021ம் ஆண்டில் 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நீண்டகாலம் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது.

சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி, 2019 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதி வரை சென்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஃபைனல் வரை வென்றது. இந்த 2 முக்கியமான நாக் அவுட் போட்டிகளிலுமே இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்றுத்தான் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இதையும் படிங்க - IPL 2022 சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன்; தோனிக்கு மாற்று வீரர் இவரா? சோஷியல் மீடியா மூலம் பரபரப்பை கிளப்பிய வீரர்

சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி உலக கோப்பை எதையும் வெல்லவில்லை என்றாலும், ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆடி உலகம் முழுதும் சென்று வெற்றிகளை குவித்தது. 

ரவி சாஸ்திரி 4 ஆண்டுகாலம் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்காற்றியிருக்கிறார். ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக வரும் 17ம் தேதி தொடங்கும் தொடரிலிருந்து 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை வரை ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்காக கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஃபேர்வெல் போஸ்ட் செம வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க -  நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்

ரவி சாஸ்திரி மற்றும் ஃபீல்டிங் கோச் ஸ்ரீதர் ஆகிய இருவருடன் அமர்ந்திருக்கும் ஃபோட்டோவை பதிவிட்டு, நீங்கள் (சாஸ்திரி) கொடுத்த அனைத்து நினைவுகளுக்கும் நன்றி. ஒரு அணியாக உங்களுடனான எங்களது பயணம் மிகச்சிறந்தது. இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. உங்கள் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும். வாழ்வில் உங்களது அடுத்தகட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள் என்று கோலி பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

விராட் கோலியின் இந்த ஃபேர்வெல் போஸ்ட் செம வைரலாகிவருகிறது.
 

click me!