
ஐபிஎல் 15வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவரும் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
சன்ரைசர்ஸ் அணி இரு மாற்றங்களுடனும், ஆர்சிபி அணி எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடனும் களமிறங்கியுள்ளன. சன்ரைசர்ஸ் அணியில் சீன் அபாட் மற்றும் ஷ்ரேயாஸ் கோபாலுக்கு பதிலாக முறையே ஃபரூக்கி மற்றும் ஜெகதீஷா சுஜித் ஆகிய இருவரும் களமிறங்கினர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷான்க் சிங், ஜெகதீஷா சுஜித், கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், ஃபரூக்கி, உம்ரான் மாலிக்.
ஆர்சிபி அணி:
விராட் கோலி, டுப்ளெசிஸ் (கேப்டன்), ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல் முகமது சிராஜ், ஹேசில்வுட்.
முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆர்சிபி அணியின் தொடக்க வீரரும் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான கோலி, இன்னிங்ஸின் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். ஜெகதீஷா சுஜித் லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசிய பந்தில் சம்மந்தமே இல்லாமல் அதை அடித்து அசால்ட்டாக அடித்து ஷார்ட் மிட் விக்கெட் திசையில் கையில் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். அவுட்டான பின், இந்த பந்திலா அவுட்டானோம் என்ற வியப்புடன், அவரே தலையில் அடித்துக்கொண்டுதான் வெளியேறினார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் விராட் கோலி, இந்த ஐபிஎல் சீசனிலும் கடுமையாக திணறிவருகிறார். இந்த சீசனில் 11 போட்டிகளில் ஒரேயொரு அரைசதத்துடன் 216 ரன்கள் மட்டுமே அடித்திருந்த விராட் கோலி, சன்ரைசர்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இந்த சீசனில் ஏற்கனவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறியிருந்த நிலையில், இந்த போட்டியில் மீண்டும் சன்ரைசர்ஸுக்கு எதிராக முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார்.
அதைத்தொடர்ந்து ஃபாஃப் டுப்ளெசிஸுடன் ரஜாத் பட்டிதார் கோடி சேர்ந்து ஆடிவருகிறார்.