SRH vs RCB: டாஸ் ரிப்போர்ட்.. சன்ரைசர்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..!

Published : May 08, 2022, 03:27 PM IST
SRH vs RCB: டாஸ் ரிப்போர்ட்.. சன்ரைசர்ஸ் அணியில்  2 அதிரடி மாற்றங்கள்..!

சுருக்கம்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.   

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் போட்டியில் இன்றைய போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சீன் அபாட் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு முறையே ஃபரூக்கி மற்றும் ஜெகதீஷா சுஜித் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷான்க் சிங், ஜெகதீஷா சுஜித், கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், ஃபரூக்கி, உம்ரான் மாலிக்.

ஆர்சிபி அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

ஆர்சிபி அணி:

விராட் கோலி, டுப்ளெசிஸ் (கேப்டன்), ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல் முகமது சிராஜ், ஹேசில்வுட்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!