குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 177 ரன்கள் அடித்து 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைடன்ஸும், கடைசி இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸும் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
undefined
ஷுப்மன் கில், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், பிரதீப் சங்வான், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கைரன் பொல்லார்டு, டேனியல் சாம்ஸ், ரித்திக் ஷோகீன், ஜஸ்ப்ரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்.
முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் இஷான் கிஷனும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா தொடக்கம் முதலே அடித்து ஆடி அரைசதத்தை நெருங்கிய நிலையில், 28 பந்தில் 43 ரன்களுக்கு ரஷீத்கானின் பந்தில் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவ் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸின் ஸ்கோர் வேகமாக உயர்ந்துகொண்டிருந்த நிலையில், பொல்லார்டு களத்திற்கு வந்த பின்னர் ரன் வேகம் குறைந்தது. மந்தமாக பேட்டிங் ஆடிய பொல்லார்டு 14 பந்தில் 4 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 21 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் கடைசியில் டிம் டேவிட் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மும்பை இந்தியன்ஸுக்கு இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுத்தார். 21 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாச, 20 ஓவரில் 177 ரன்கள் அடித்த மும்பை அணி, 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.