13 வருட டெஸ்ட் வாழ்க்கையில் முதல் முறையாக முழு தொடரையும் இழந்த விராட் கோலி!

By Rsiva kumar  |  First Published Feb 10, 2024, 3:35 PM IST

விராட் கோலி தனது 13 வருட டெஸ்ட் வாழ்க்கையில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெறாததன் மூலமாக முழு தொடரையும் இழந்துள்ளார்.


இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெறவே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்று சமனில் உள்ளன. இதைத் தொடர்ந்து வரும் 15ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

ஏற்கனவே முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போதே விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக முதல் 2 போட்டிகளில் இடம் பெற மாடடர் என்று அறிவிக்கப்பட்டது. 2 போட்டிகள் முடிந்த நிலையில் எஞ்சிய 3 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதிலேயும் விராட் கோலி இடம் பெறவில்லை.

Tap to resize

Latest Videos

மேலும் தனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி எஞ்சிய 3 போட்டிகளில் இடம் பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலியின் முடிவிற்கு பிசிசிஐ முழு ஆதரவும் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட கோலி விளையாடததன் மூலமாக அவரது 13 ஆண்டு டெஸ்ட் வாழ்க்கையில் முதல் முறையாக முழு டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளார்.

எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.

குறிப்பு – கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா – உடல் தகுதியை பொறுத்து இடம் பெறுவார்கள்.

click me!