2008 அண்டர் 19 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரா விராட் கோலி செய்த தரமான சம்பவத்தின் வீடியோ

By karthikeyan VFirst Published Jul 9, 2019, 10:40 AM IST
Highlights

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணியும் முதல் அரையிறுதி போட்டியில் இன்று மோதுகின்றன. மான்செஸ்டரில் மதியம் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. 
 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்று நடக்கவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. மான்செஸ்டரில் இன்று நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. வரும் 11ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணியும் முதல் அரையிறுதி போட்டியில் இன்று மோதுகின்றன. மான்செஸ்டரில் மதியம் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. 

2008ல் நடந்த அண்டர் 19 உலக கோப்பை அரையிறுதியிலும் விராட் தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தான் மோதின. அந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இறுதி போட்டியிலும் வென்று கோப்பையை வென்றது. 

அந்த அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 205 ரன்கள் அடித்தது. டி.எல்.எஸ் முறைப்படி 43 ஓவர்களில் 191 ரன்கள் என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை 42வது ஓவரில் எட்டி இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

அந்த போட்டியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனின் விக்கெட்டை இந்திய கேப்டன் விராட் கோலி வீழ்த்தினார். 37 ரன்களில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த வில்லியம்சனை விராட் கோலி வீழ்த்தினார். கோலியின் பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். வில்லியம்சன். அந்த போட்டியில் கோலி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விராட் கோலி வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்திய வீடியோ இதோ... 
 

click me!