அவுட்டாகிவிட கூடாதுனு ஆடுற இவன்லாம் என்னைய பார்த்து சிரிக்கிறான்..! களத்தில் ராபின்சனை கதறவிட்ட கிங் கோலி

Published : Aug 18, 2021, 03:52 PM IST
அவுட்டாகிவிட கூடாதுனு ஆடுற இவன்லாம் என்னைய பார்த்து சிரிக்கிறான்..! களத்தில் ராபின்சனை கதறவிட்ட கிங் கோலி

சுருக்கம்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஸ்லெட்ஜிங்கிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் நடந்தது. அதிலும் ஜோஸ் பட்லர், ஆலி ராபின்சனை விராட் கோலி மிகக்கடுமையாக ஸ்லெட்ஜ் செய்தார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. 

2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து டெயிலெண்டரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு உடம்புக்கு நேராக பவுன்ஸர்களாக வீசினார் பும்ரா. டெயிலெண்டரான ஆண்டர்சனுக்கு பும்ரா பந்துவீசிய விதம், ஆண்டர்சனுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் அதிருப்தியளிக்கும் விதமாக அமைந்தது. ஆண்டர்சன் அவரது அதிருப்தியை களத்தில் உடனடியாக பும்ராவிடம் வெளிப்படுத்தினார்.

ஆனாலும் பும்ராவின் அந்த செயலை மனதில் வைத்திருந்த இங்கிலாந்து அணி, பும்ரா 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடவந்தபோது காட்டினர். பும்ராவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பவுன்ஸர்களாக வீசினார் மார்க் உட். ஆனால் அந்த பவுன்ஸர்கள் சவால்களையெல்லாம் தனது திறமையால் சிறப்பாக எதிர்கொண்டு களத்தில் நிலைத்து ஆடி மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடினார் பும்ரா.

பும்ராவுக்கு பவுன்ஸர்கள் வீசியது மட்டுமல்லாது, அவரை ஸ்லெட்ஜிங்கும் செய்தார் மார்க் உட். அவரைத்தொடர்ந்து மற்ற வீரர்களும் அவரை சாட, இதனை பெவிலியனில் இருந்து பார்த்த இந்திய அணி கேப்டன் கோலியும், அணியினரும் இங்கிலாந்தை 2வது இன்னிங்ஸில் வச்சு செய்வதென்று முடிவெடுத்துவிட்டனர். அதை செயல்படுத்த ஏதுவாக,  ஷமியும் பும்ராவும் சேர்ந்து பெரிய இன்னிங்ஸ் ஆடி போதுமான ஸ்கோரை அடித்து கொடுத்தனர்.

60 ஓவரில் 272 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு டைட்டான பவுலிங் வீசி நெருக்கடி கொடுத்தது மட்டுமல்லாது, பட்லர், ராபின்சன் ஆகிய வீரர்களை ஸ்லெட்ஜிங்கும் வைத்து செய்துவிட்டார் கோலி. முகமது சிராஜும் ராபின்சனுக்கு பவுன்ஸர் வீசிவிட்டு பயங்கரமாக முறைத்தார். 

பட்லரிடம், இது வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டி அல்ல என்று கோலி சீண்டிய கோலி, ஆலி ராபின்சனை போரிங்காக ஆடுவதாக சீண்டினார். மேலும், அவுட்டாகிவிட கூடாது என்று ஆடும் இவர்(ராபின்சன்), நான் கவர் டிரைவை மிஸ் செய்த போது என்னை பார்த்து சிரிக்கிறார். இப்போது என்னை ஃபேஸ் செய்யமுடியாமல் நிற்கிறார் என்று ஸ்லெட்ஜிங் செய்தார் கோலி.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி