சும்மா இருந்தவங்கள உசுப்பேத்தி விட்டுட்டீங்க; பொளக்க போறாங்க..! இங்கிலாந்து அணியை எச்சரிக்கும் மைக்கேல் வான்

By karthikeyan VFirst Published Aug 17, 2021, 7:29 PM IST
Highlights

இந்திய அணியை இங்கிலாந்து வீரர்கள் உசுப்பேற்றிவிட்டதாக உசுப்பேற்றிவிட்டதாகவும், அதன் விளைவை இங்கிலாந்து இனிவரும் போட்டிகளில் எதிர்கொள்ள நேரிடும் என்றும் மைக்கேல் வான் எச்சரித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. 

2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து டெயிலெண்டரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு உடம்புக்கு நேராக பவுன்ஸர்களாக வீசினார் பும்ரா. டெயிலெண்டரான ஆண்டர்சனுக்கு பும்ரா பந்துவீசிய விதம், ஆண்டர்சனுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் அதிருப்தியளிக்கும் விதமாக அமைந்தது. ஆண்டர்சன் அவரது அதிருப்தியை களத்தில் உடனடியாக பும்ராவிடம் வெளிப்படுத்தினார்.

ஆனாலும் பும்ராவின் அந்த செயலை மனதில் வைத்திருந்த இங்கிலாந்து அணி, பும்ரா 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடவந்தபோது காட்டினர். பும்ராவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பவுன்ஸர்களாக வீசினார் மார்க் உட். ஆனால் அந்த பவுன்ஸர்கள் சவால்களையெல்லாம் தனது திறமையால் சிறப்பாக எதிர்கொண்டு களத்தில் நிலைத்து ஆடி மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடினார் பும்ரா.

பும்ராவுக்கு பவுன்ஸர்கள் வீசியது மட்டுமல்லாது, அவரை ஸ்லெட்ஜிங்கும் செய்தார் மார்க் உட். அவரைத்தொடர்ந்து மற்ற வீரர்களும் அவரை சாட, இதனை பெவிலியனில் இருந்து பார்த்த இந்திய அணி கேப்டன் கோலியும், அணியினரும் இங்கிலாந்தை 2வது இன்னிங்ஸில் வச்சு செய்வதென்று முடிவெடுத்துவிட்டனர். அதை செயல்படுத்த ஏதுவாக,  ஷமியும் பும்ராவும் சேர்ந்து பெரிய இன்னிங்ஸ் ஆடி போதுமான ஸ்கோரை அடித்து கொடுத்தனர்.

60 ஓவரில் 272 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு டைட்டான பவுலிங் வீசி நெருக்கடி கொடுத்தது மட்டுமல்லாது, பட்லர், ராபின்சன் ஆகிய வீரர்களை ஸ்லெட்ஜிங்கும் வைத்து செய்துவிட்டார் கோலி. முகமது சிராஜும் ராபின்சனுக்கு பவுன்ஸர் வீசிவிட்டு பயங்கரமாக முறைத்தார். பட்லரிடம், இது வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டி அல்ல என்று கோலி கடுமையாக சீண்டினார்.

இவ்வாறாக மொத்த போட்டியும் மிகவும் பரபரப்பாக அமைந்தது. ஆட்டம், ஸ்லெட்ஜிங் என அனைத்துவகையிலும் கடுமையான போட்டியாக இருந்த லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா ஜெயித்தது.

இந்நிலையில், இந்திய அணியை இங்கிலாந்து சீண்டியது, இனிவரும் போட்டிகளில் இங்கிலாந்துக்கு பாதிப்பாகவே அமையும் என்று மைக்கேல் வான் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் வான்,  இங்கிலாந்து அணி இந்திய வீரர்களை உசுப்பேற்றிவிட்டுள்ளனர். அதன்பின்னர் தான் வெறித்தனமாக ஆடினார்கள். இனிமேல் இங்கிலாந்து செம கம்பேக் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த இங்கிலாந்து அணி அப்படியான கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை. இன்னும் 3 போட்டிகளில் ஆட வேண்டியிருக்கும் நிலையில், இந்திய வீரர்களை உசுப்பேற்றிவிட்டுள்ளனர் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

click me!