வெற்றி ரகசியத்தை ஹர்திக் பாண்டியாவிடம் பகிர்ந்த விராட் கோலி.! நம்பர் 1 ஆவது எப்படி என்று நச்சுனு சொன்ன கோலி

Published : Jun 27, 2020, 03:36 PM IST
வெற்றி ரகசியத்தை ஹர்திக் பாண்டியாவிடம் பகிர்ந்த விராட் கோலி.!  நம்பர் 1 ஆவது எப்படி என்று நச்சுனு சொன்ன கோலி

சுருக்கம்

விராட் கோலி வெற்றிகரமான வீரராக திகழும் ரகசியத்தை ஹர்திக் பாண்டியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.   

விராட் கோலி வெற்றிகரமான வீரராக திகழும் ரகசியத்தை ஹர்திக் பாண்டியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து, ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். 

விராட் கோலியை கிரிக்கெட் உலகமே வியந்து பார்க்கிறது. சமகால இந்திய அணியில் ரோஹித் சர்மா என்ற அசாத்திய திறமை கொண்ட பேட்ஸ்மேனை அணியில் பெற்றிருந்தபோதும், அவரது இரட்டை சதங்களை கடந்து, அவரை மிஞ்சிய ஒரு வீரராக விராட் கோலி தன்னை தக்கவைத்து கொண்டுள்ளார். அதற்கு காரணம், அவரது கன்சிஸ்டன்ஸி. தொடர்ச்சியாக எல்லா போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துக்கொண்டே இருப்பவர் கோலி.  கோலியின் அந்த நிலைத்தன்மை தான் மற்ற வீரர்களை விட அவரை உயர்த்தி காட்டுகிறது. 

அந்தவகையில், வெற்றிகரமான வீரராக திகழும் விராட் கோலியும், இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வெற்றிக்கான ரகசியத்தை கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். பரோடா அணியின் அண்டர் 19 வீரர்களுடன் உரையாடிய ஹர்திக் பாண்டியா, கோலியுடனான உரையாடல் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, 2 நாளைக்கு முன்பு கூட கோலியிடம் பேசினேன். அப்போது உங்களது வெற்றிக்கான ரகசியம் என்ன? என்று கேட்டேன். அதற்கு, உனது அணுகுமுறை, செயல்பாடு எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.. நம்பர் 1 என்ற இடத்தை பிடிக்க வேண்டும் என்ற வேட்கை உனக்குள் இருந்துகொண்டே இருக்க வேண்டும். மற்றவரை கீழே தள்ளி முதலிடம் பிடிக்க முயலாமல், சரியான வழியில் கடும் உழைப்பின் மூலம் நம்பர் 1 என்ற இடத்தை பிடிக்க முயல வேண்டும். அதற்கான தனியாத வேட்கை இருக்க வேண்டும் என்று தெரிவித்ததாக ஹர்திக் பாண்டியா கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!