அனுஷ்கா சர்மா நடிச்சதுலயே எனக்கு அந்த படம் தான் ரொம்ப பிடிக்கும்..! மனம் திறந்த கோலி

Published : May 20, 2021, 03:15 PM IST
அனுஷ்கா சர்மா நடிச்சதுலயே எனக்கு அந்த படம் தான் ரொம்ப பிடிக்கும்..! மனம் திறந்த கோலி

சுருக்கம்

தனது மனைவி அனுஷ்கா சர்மா நடித்ததிலேயே தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எதுவென்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.  

இந்தியாவின் பிரபல ஜோடிகளில் பிரபலமானது விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி. கோலியும் அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியும், பாலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவருமான அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்துகொண்டு, சரியான புரிதலுடன் இல்வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்துவருகின்றனர்.

விராட் கோலி ஆடும் போட்டிகளில் அனுஷ்கா சர்மா நேரில் வந்து அவரை உற்சாகப்படுத்துவதையும், கோலியின் சதங்கள், மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களையும் ரசிப்பதையும் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில், தற்போது விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மா நடித்ததில் தனக்கு பிடித்த திரைப்படம் எதுவென்று கூறியிருக்கிறார். 

இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய விராட் கோலி, ”ஏய் தில் ஹே மிஷ்கில்” தான் அனுஷ்காவின் நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த படத்தில் நடித்த கேரக்டர் தான் எனது ஃபேவரைட். இப்போது வரைக்கும் கூட நான் அவரிடம் அதை கூறிவருகிறேன். அந்த படத்தில் குறிப்பாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரை பார்க்க ரன்பீர் கபூர் வரும் காட்சி என் இதயத்தை உலுக்கும் காட்சி. அதை இப்போது வரை, அவ்வப்போது யூடியூபில் பார்ப்பேன் என்று கோலி தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்திருந்தனர். கரன் ஜோஹர் அந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!