விராட் கோலி - பாபர் அசாம்.. கவர் டிரைவில் யார் பெஸ்ட்..? இயன் பெல் அதிரடி

By karthikeyan VFirst Published May 20, 2021, 2:36 PM IST
Highlights

விராட் கோலி - பாபர் அசாம் ஆகிய இருவரில் யாருடைய கவர் டிரைவ் பெஸ்ட் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் பெல் தெரிவித்துள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக விராட் கோலி திகழ்கிறார். 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி சதங்களை விளாசும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களுடன் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

லெஜண்ட் என்கிற இடத்தை கோலி எட்டிவிட்டார். கோலிக்கு நிகரான சிறந்த வீரராக பார்க்கப்படுகிறார் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம். டெக்னிக்கலாக கோலிக்கு நிகரான சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் பாபர் அசாமை, கோலியுடன் ஒப்பிட்டது போய், கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் என்று சிலர் கூற தொடங்கிவிட்டனர். ஆனால் இன்சமாம் போன்ற சில தெளிவான முன்னாள் ஜாம்பவான்கள், இப்போதே பாபர் அசாமை கோலியுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று கூறியிருக்கிறார்.

ஆனால் பாபர் அசாம் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கோலியின் டிரேட் மார்க் ஷாட்டான கவர் டிரைவை கோலிக்கு நிகராக சிறப்பாக ஆடுகிறார் பாபர் அசாம். சமகால கிரிக்கெட்டில் கவர் டிரைவ் ஷாட்டுக்கு கோலியும் பாபர் அசாமுமே அடையாளமாக திகழ்கிறார்கள்.

இந்நிலையில், இருவரில் யார் கவர் டிரைவில் பெஸ்ட் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் பெல், டெக்னிக்கல் பேட்ஸ்மேனை எனக்கு ரொம்ப பிடிக்கும். விராட் கோலி தான் இப்போதைய சூழலில் பெஸ்ட் பேட்ஸ்மேன். கவர் டிரைவில் அவரை விட சிறந்தவர் என்று வேறொருவரை சொல்வது மிகக்கடினம் என்று இயன் பெல் தெரிவித்துள்ளார்.
 

click me!