பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் முதல் முறையாக பணியாற்றிய அனுபவம்..! மனம் திறந்த Virat Kohli

By karthikeyan VFirst Published Dec 6, 2021, 6:12 PM IST
Highlights

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் முதல் முறையாக பணியாற்றிய அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் விராட் கோலி.
 

2017ம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரிக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே நல்ல உறவும் புரிதலும் இருந்தது. ஆனால் அதற்கு முன் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவிற்கும் விராட் கோலிக்கும் இடையே நல்ல உறவு இல்லை.

ரவி சாஸ்திரிக்கும் கோலிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததால் தான், அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு பிறகும், மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்த நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி ஆடிய, நியூசிலாந்துக்கு எதிரான முதல் தொடரிலேயே அபார வெற்றி பெற்றது இந்திய அணி. டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.

டி20 தொடர் மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாத விராட் கோலி, 2வது டெஸ்ட் போட்டியில் தான் ஆடினார். 2வது டெஸ்ட் போட்டியில் தான் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் முதல் முறையாக ஆடினார் கோலி. ராகுல் டிராவிட்டுடன் ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடியிருக்கும் கோலி, அவரது பயிற்சியின் கீழ் இப்போதுதான் முதல் முறையாக ஆடியிருக்கிறார்.

இந்நிலையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் ஆடிய அனுபவம் குறித்து பேசியுள்ள விராட் கோலி, நாங்கள் அனைவருமே இந்திய கிரிக்கெட்டுக்கு சர்வீஸ் செய்கிறோம். முந்தைய அணி நிர்வாகமும் சிறப்பாக செயல்பட்டது. ராகுல் Bhai வந்த பிறகும், மனநிலை முன்பு இருந்தபடியேதான் இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல பணியாற்றுகிறோம். இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்வானதாக வைத்திருப்பதுடன், தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்றார் கோலி.
 

click me!