வெறும் 42 ரன்கள் மட்டுமே தேவை.. சச்சின், கவாஸ்கர், டிராவிட் ஆகிய லெஜண்ட்களின் சாதனையை தகர்க்கப்போகும் கோலி

By karthikeyan VFirst Published Mar 9, 2023, 12:04 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் 42 ரன்கள் அடித்தால் விராட் கோலி, கவாஸ்கர் மற்றும் ராகுல் டிராவிட்டின் சாதனைகளை முறியடிப்பார். அதை முதல் இன்னிங்ஸிலேயே அடித்துவிட்டால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் சேர்த்து முறியடிக்கலாம்.
 

சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 2020ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ஃபார்மை இழந்து தவித்துவந்த விராட் கோலி கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் சதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பி, பழையபடி சதங்களை விளாச தொடங்கினார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சதமடிக்காமல் திணறிவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்கோர் செய்யமுடியாமல் தடுமாறுகிறார். அதனால் அவரது டெஸ்ட் சராசரி 55லிருந்து 48 ஆக குறைந்தது. குறிப்பாக ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள கஷ்டப்படுகிறார். 2017லிருந்து 2020 வரை ஸ்பின்னர்களுக்கு எதிரான அவரது சராசரி 115 ஆகும். ஆனால் 2021 ஜனவரியிலிருந்து இப்போது வரை ஸ்பின்னிற்கு எதிரான சராசரி வெறும் 22 ஆகும். இந்த வித்தியாசமே, அவர் எந்தளவிற்கு ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுகிறார் என்பதை காட்டுகிறது.

Explainer: ICC WTC ஃபைனல்: இந்தியா-இலங்கை இடையே போட்டி! அனைத்துவிதமான சாத்தியக்கூறுகள், கணக்கீடுகள் ஓர் அலசல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் கோலி சரியாக பேட்டிங் ஆடவில்லை. இந்த தொடரின் 3 போட்டிகளிலும் அவர் அடித்ததில் அதிகபட்ச ஸ்கோரே 44 ரன்கள் தான். அகமதாபாத்தில் இன்று தொடங்கி நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் ஜெயித்தால் தான் இந்த தொடரை இந்திய அணி வெல்ல முடியும் என்பதுடன், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற இந்த போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக ஜெயித்தே தீரவேண்டும். வெற்றி கட்டாயத்தில் இந்திய அணி ஆடும் இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டுமென்றால் கோலி சிறப்பாக பேட்டிங் ஆடவேண்டியது அவசியம். 

விராட் கோலி இந்த போட்டியில் 42 ரன்கள் அடித்தால் இந்திய மண்ணில் 4000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 5வது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகிய நால்வருக்கு அடுத்தபடியாக 5வது இடத்தை பிடிப்பார்.

இந்திய மண்ணில் 71 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 3958 ரன்கள் அடித்துள்ள கோலி, அகமதாபாத் டெஸ்ட்டில் 42 ரன்கள் அடித்தால், இந்தியாவில் வேகமாக 4000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கவாஸ்கர்(87 இன்னிங்ஸ்) மற்றும் ராகுல் டிராவிட் (88 இன்னிங்ஸ்) ஆகிய இருவரின் சாதனையை முறியடிப்பார். 

ICC WTC: இந்திய அணிக்கு அச்சுறுத்தல்.. நியூசிலாந்தில் பட்டைய கிளப்பும் இலங்கை

அந்த 42 ரன்களை முதல் இன்னிங்ஸிலேயே அடித்தால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கலாம். சச்சின் 78 இன்னிங்ஸ்களில் இந்தியாவில் 4000 ரன்களை அடித்துள்ளார். விராட் கோலி அகமதாபாத் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 42 ரன்கள் அடித்தால் 77 இன்னிங்ஸ்களில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். ஒருவேளை 2வது இன்னிங்ஸில்தான் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டமுடிகிறது என்றால் சச்சின் சாதனையை சமன் மட்டுமே செய்யமுடியும்.
 

click me!