Asia Cup: விராட் கோலி அதிரடி அரைசதம்..! பாகிஸ்தானுக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

By karthikeyan VFirst Published Sep 4, 2022, 9:35 PM IST
Highlights

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 181 ரன்கள் அடித்து, 182 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடிவருகின்றன. துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் யார் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர்..? ராகுல் டிராவிட் ஓபன் டாக்

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், குஷ்தில் ஷா, இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா.
 
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடினர். ரோஹித் சர்மா 16 பந்தில் 28 ரன்களும், கேஎல் ராகுல் 20 பந்தில் 28 ரன்களும் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.  இவர்களின் அதிரடியால் பவர்ப்ளே 6 ஓவரில் 62 ரன்களை குவித்தது இந்திய அணி.

அதன்பின்னர் விராட் கோலி மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் சூர்யகுமார் யாதவ்(13), ரிஷப் பண்ட் (14), ஹர்திக் பாண்டியா(0), தீபக் ஹூடா (16) ஆகியோர் மறுமுனையில் ஏமாற்றமளித்து ஆட்டமிழந்தனர். 

இதையும் படிங்க - விராட் கோலியால் சூர்யகுமார் யாதவை நெருங்கக்கூட முடியாது..! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அதிரடி

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய விராட் கோலி அரைசதம் அடித்தார். 44 பந்தில் 60 ரன்களை குவித்தார் கோலி. கோலி ஃபார்மில் இல்லை என்று கூறப்படும் நிலையில், முக்கியமான ஆட்டத்தில் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து அணியை காப்பாற்றினார். கோலியின் அரைசதத்தால் 20 ஓவரில் 181 ரன்களை குவித்த இந்திய அணி, 182 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

click me!