அந்த 4 எழுத்து வார்த்தைய சொல்லணும்னு தோணுது.. ஆனால் சொல்லமாட்டேன்! பிரஸ்மீட்டில் புதிர் போட்ட ராகுல் டிராவிட்

By karthikeyan VFirst Published Sep 4, 2022, 6:11 PM IST
Highlights

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புதிர் போட்டார். 
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

லீக் சுற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. 

சூப்பர்  4 சுற்றில் இன்று நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில், லீக் சுற்றில்  அடைந்த தோல்விக்கு இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குகின்றன.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ஜடேஜா..? ரசிகர்களை குஷிப்படுத்திய ராகுல் டிராவிட்டின் அப்டேட்

பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் பொதுவாகவே மிரட்டலான யூனிட்டாகவும் வலுவானதாகவும் இருக்கும். இப்போது இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கும் படுமிரட்டலாக உள்ளது. ஒரு காலத்தில் பவுலிங்கில் பாகிஸ்தான் அணி தான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இப்போது பவுலிங்கில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு நிகராக என்று சொல்வதைவிட, பாகிஸ்தானைவிட வலுவான பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.

லீக் சுற்று போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் தெறிக்கவிட்டனர். அனுபவ புவனேஷ்வர் குமார், இளம் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் அசத்தினர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார். பும்ரா, ஹர்ஷல் படேல், ஷமி ஆகியோர் இல்லாதபோதிலும், பாகிஸ்தானை வெறும் 147 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது இந்திய அணி.

இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 சுற்று போட்டி நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பாகிஸ்தான் அணி மிகச்சிறந்த பவுலிங் அணி. நாங்களும் நல்ல பவுலிங் அணி தான். லீக் போட்டியில் 147 ரன்களுக்கு பாகிஸ்தானை கட்டுப்படுத்தினோம். எப்படி பந்துவீசியிருக்கிறோம், அதன்மூலம் என்ன ரிசல்ட் கிடைத்திருக்கிறது என்பதன் அடிப்படையிலேயே எப்பேர்ப்பட்ட பவுலிங் என்பது தீர்மானிக்கப்படும். எங்கள் பவுலர்களின் பகுப்பாய்வு சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் பவுலர்களும் சிறப்பாக பந்துவீசினார்கள். ஆனால் ரிசல்ட் எங்கள் பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது. ஒரு வார்த்தையை பயன்படுத்த விரும்புகிறேன். என் வாய் வரை வந்துவிட்டது. ஆனால் இங்கே அந்த வார்த்தையை பயன்படுத்தமாட்டேன் என்றார் ராகுல் டிராவிட்.

இதையடுத்து நிருபர் ஒருவர் ”exuberant” என்ற வார்த்தையா என்று கேட்டார். அதற்கு, இல்லை... அது 4 எழுத்து வார்த்தை.. அந்த வார்த்தை S-ல் தொடங்கும் என்று புதிர் போட்டார் டிராவிட். இந்திய பவுலிங் அட்டாக் "Sexy" பவுலிங் அட்டாக்காக உள்ளது என்று கூறவந்தார். ஆனால் அந்த வார்த்தையை கூறாமல் தவிர்த்தார்.
 

click me!