விராட் கோலியால் சூர்யகுமார் யாதவை நெருங்கக்கூட முடியாது..! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 4, 2022, 4:48 PM IST
Highlights

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியால் சூர்யகுமார் யாதவை நெருங்கக்கூட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளார். 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த விராட் கோலி, கடந்த சுமார் 3 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும், அரைசதங்களை அடித்து பங்களிப்பு செய்துவருகிறார். 

102 டெஸ்ட், 262 ஒருநாள் மற்றும் 101 டி20 போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி 23 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 43 சதங்கள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்களும் விளாசியுள்ள விராட் கோலி, 101 டி20 போட்டிகளில் ஆடியும் ஒரு சதம் கூட அடித்ததில்லை.

இதையும் படிங்க - IND vs PAK: தம்பி நீயெல்லாம் சரியா வரமாட்ட கிளம்பு.. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

ஆனால் அதேவேளையில், ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் அடித்துள்ளார். கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் சதமடித்துவிட்டார். 3ம் வரிசையில் இறங்கியும் கூட விராட் கோலி இதுவரை டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர் என்றாலும், டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவை போன்ற அதிரடியான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் இல்லை என்றும், அதனால் தான் அவரால் ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு ஒரு முறை கூட கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்றும் ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளார் .

விராட் கோலி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீஃப், ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியை யாராலும் நெருங்க முடியாது. ஆனால் அதேவேளையில், டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் அவர் அவ்வளவு சிறந்த வீரர் கிடையாது. டி20 கிரிக்கெட்டில் நல்ல சராசரியை வைத்திருக்கிறாரே தவிர, நல்ல ஸ்டிரைக் ரேட்டை வைத்திருக்கவில்லை. 

விராட் கோலி 30-35 பந்துகள் பேட்டிங் ஆடியதற்கு பின் அடித்து ஆடுகிறார்.  ரோஹித் சர்மா பவர்ப்ளேயிலேயே அடித்து ஆடும் வீரர். விராட் கோலி எப்போதுமே சூர்யகுமார் மாதிரியோ ரோஹித் மாதிரியோ ஆடவேமுடியாது. அவரது பேட்டிங் ஸ்டைலே அதுதான். ஐபிஎல்லிலும் ஆர்சிபிக்காக அப்படித்தான் ஆடுகிறார். அதனால் தான் அவரால் ஆர்சிபிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்று ரஷீத் லத்தீஃப் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ஜடேஜா..? ரசிகர்களை குஷிப்படுத்திய ராகுல் டிராவிட்டின் அப்டேட்

இந்த விஷயம் விராட் கோலிக்கும் தெரியும். விராட் கோலிக்கு அவரது பலம் மற்றும் அணுகுமுறை என்னவென்பது தெரியும். அதனால் தான், ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவின் அசாத்தியமான பேட்டிங்கை கண்டு வியந்துபோய், இன்னிங்ஸுக்கு பின் அவருக்கு தலைவணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!