ஆசிய கோப்பை தோல்வி எதிரொலி.. திடீரென ஓய்வு அறிவித்தார் முஷ்ஃபிகுர் ரஹீம்

By karthikeyan VFirst Published Sep 4, 2022, 2:22 PM IST
Highlights

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் வங்கதேச சீனியர் கிரிக்கெட் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம்.
 

வங்கதேச அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் முஷ்ஃபிகுர் ரஹீம். 2005ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முஷ்ஃபிகுர் ரஹீம்,  2006ம் ஆண்டு வெள்ளைப்பந்து (ஒருநாள், டி20) போட்டிகளில் அறிமுகமானார்.

வங்கதேச அணிக்காக 82 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 102 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 102 போட்டிகளில் ஆடி 1500 ரன்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க - Asia Cup: தனுஷ்கா குணதிலகாவை வம்பு இழுத்து அவுட்டாக்கிய ரஷீத் கான்.! களத்தில் சூடான வாக்குவாதம்.. வைரல் வீடியோ

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 தொடராக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றில் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளிடம் தோற்று லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியது வங்கதேச அணி.

இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் முஷ்ஃபிகுர் ரஹீம். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் நோக்கில் டி20  கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக முஷ்ஃபிகுர் ரஹீம் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க - நீ நாட் அவுட்டா போவதால் டீமுக்கு என்ன யூஸ்.? அரைசதம் அடித்தும் வாசிம் அக்ரமிடம் திட்டு வாங்கிய முகமது ரிஸ்வான்

டி20 கிரிக்கெட்டில் அடுத்த தலைமுறை இளம் வீரர்களுக்கு வழிவிடும் விதமாக ஓய்வு அறிவித்துள்ளார் 35 வயதான  முஷ்ஃபிகுர் ரஹீம்.
 

click me!