
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.
லீக் சுற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
சூப்பர் 4 சுற்றில் இன்று நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில், லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கியுள்ளன.
இதையும் படிங்க - தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் யார் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர்..? ராகுல் டிராவிட் ஓபன் டாக்
துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 2வது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். டாஸ் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜடேஜா காயம் காரணமாக ஆசிய கோப்பையிலிருந்து விலகிவிட்டார். அதனால் அவரது இடத்தில் தீபக் ஹூடா ஆடுகிறார். விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட்டும், ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கானுக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோயும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
இதையும் படிங்க - அந்த 4 எழுத்து வார்த்தைய சொல்லணும்னு தோணுது.. ஆனால் சொல்லமாட்டேன்! பிரஸ்மீட்டில் புதிர் போட்ட ராகுல் டிராவிட்
பாகிஸ்தான் அணி:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், குஷ்தில் ஷா, இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா.