இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் இத்தனை கோடியா? விளக்கம் கொடுத்த விராட் கோலி!

தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக வரும் வருமானம் குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி விளக்கம் கொடுத்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி கிரிக்கெட் மட்டுமின்றி முதலீடு, சொத்துக்கள் மூலமாக வருமானம் ஈட்டி வருகிறார். வருத்திற்கு ரூ.1050 கோடி வரையில் வருமானம் பெறுகிறார். சமூக வலைதளம் மூலமாக விராட் கோலிக்கு வருமானம் வந்து கொண்டு இருக்கிறது.

தலைமை பயிற்சியாளர் லட்சுமணன் இல்லாமல் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!

Latest Videos

விராட்கோலியை இன்ஸ்டாகிராம் மூலமாக 256 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். தனது ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக ரூ.11.45 கோடி வரையில் வருமானம் ஈட்டி வருகிறார். இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.3.35 கோடி வரையில் வருமானம் ஈட்டி வந்தார். ஆனால், இப்போது அது ரூ.11.45 கோடியாக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியானது.

முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற மலேசியா – தொடர்ந்து 5 முறை 3ஆவது இடம்!

இதன் மூலமாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக உலகளவில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி 3ஆவது இடம் பிடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ. 26.7 கோடியும், லியோனல் மெஸ்சி ரூ.21.5 கோடி வரையிலும் வருமானம் ஈட்டி வருகின்றனர். விராட் கோலிக்கு பிறகு அதிக வருமானம் ஈட்டும் பிரபலமாக பிரியங்கா சோப்ரா இருக்கிறார். அவர் ஒரு பதிவிற்கு ரூ.4.4 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார்.

India vs West Indies 4th T20: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 4ஆவது டி20 போட்டி: சீரிஸ் வெல்லுமா வெஸ்ட் இண்டீஸ்?

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக தான் பெறும் வருமானம் குறித்து விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது வாழ்க்கையில் தற்போது வரையில் நான் பெற்றுள்ள அனைத்திற்கும் நன்றியுள்ளவனாக கடமைப்பட்டுள்ளேன். அதே போன்று சமூக வலைதளங்கள் மூலமாக நான் ஈட்டி வரும் வருமானம் பற்றிய தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Asian Champions Trophy Hockey Final: இந்தியா – மலேசியா பலப்பரீட்சை: 4ஆவது முறையாக சாம்பியனாகுமா இந்தியா?

 

While I am grateful and indebted to all that I’ve received in life, the news that has been making rounds about my social media earnings is not true. 🙏

— Virat Kohli (@imVkohli)

 

click me!