ரோஹித்தோட ஒப்பிடுற அளவுக்குலாம் கோலி வொர்த் இல்ல!! மறுபடியும் போட்டு தாக்கிய காம்பீர்

By karthikeyan VFirst Published May 16, 2019, 9:56 AM IST
Highlights

இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் தோனி. தோனியின் கேப்டன்சி திறன் அபாரமானது. 
 

இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் தோனி. தோனியின் கேப்டன்சி திறன் அபாரமானது. 

கள வியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம், வீரர்களை பயன்படுத்தும் விதம், நெருக்கடிகளை சமாளிப்பது, திட்டங்கள் தீட்டுவது ஆகியவற்றில் சிறந்தவர் தோனி. தோனியின் இந்த அனைத்து தலைமைத்துவ தகுதிகளும் ரோஹித்திடமும் உள்ளன. ரோஹித் சர்மா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது கேப்டன்சி திறனை காட்டியுள்ளார். 

ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் சர்மா திகழ்கிறார். ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த சீசனில் கூட இந்த இரு அணிகளும் தான் இறுதி போட்டியில் மோதின. அந்தளவிற்கு இரு அணிகளும் ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 

தோனி ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்று கொடுத்துள்ளார். தோனிக்கு பின்னர் கோலி இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். ஆனால் கோலி ஆடாத தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித், சிறப்பாக செயல்பட்டு தனது கேப்டன்சி திறனை நிரூபித்துள்ளார். நிதாஹஸ் டிராபி, ஆசிய கோப்பை ஆகிய தொடர்களில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்தார். 

ஆனால் கோலி கேப்டனாக கத்துக்குட்டியாக இருந்தார். அண்மைக்காலமாகத்தான் அவரது கேப்டன்சி சற்று மேம்பட்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. ஒரு கேப்டனாக அவர் இன்னும் முழுமையடையவில்லை. இன்னும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறார். 

கோலியால் ஐபிஎல்லில் அவரது ஆர்சிபி அணிக்கு ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. இந்த சீசனிலும் பிளே ஆஃபிற்கே தகுதிபெறாமல் வெளியேறியது. அதற்கு கோலியின் கேப்டன்சி குறைபாடுகளும் முக்கிய காரணம். கோலியின் கேப்டன்சியை ஏற்கனவே பலமுறை காம்பீர் விமர்சித்திருந்த நிலையில், தற்போதும் சாடியுள்ளார். 

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்த காம்பீர், ஒரு கேப்டனாக விராட் கோலியை ரோஹித்துடனோ தோனியுடனோ ஒப்பிடவே முடியாது. ஐபிஎல்லில் ரோஹித் சர்மா 4 முறையும் தோனி 3 முறையும் தங்களது அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளனர். ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத கோலியை அவர்களுடன் ஒப்பிட முடியாது என்று காம்பீர் தெரிவித்துள்ளார். 
 

click me!