விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
மிகுந்த மகிழ்ச்சியுடனும், அன்புடனும் அனைவருக்கும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பிப்ரவரி 15 ஆம் தேதி, ஆண் குழந்தை பிறந்துள்ளது. வாமிகாவின் சிறிய சகோதரனை இந்த உலகிற்கு வரவேற்றோம்.
இந்த அழகான தருணத்தில் உங்களது ஆசிகளையும், நல்வாழ்த்துக்களையும் நாங்கள் விரும்புகிறோம். இந்த நேரத்தில் எங்களது தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்பு மற்றும் நன்றி… விராட் அண்ட் அனுஷ்கா என்று பதிவிட்டுள்ளார்.