அந்த பையன டீம்ல எடுத்ததுக்கு இதுதான் காரணம்.. கட்&ரைட்டா பேசிய பேட்டிங் கோச்

Published : Oct 20, 2019, 03:04 PM IST
அந்த பையன டீம்ல எடுத்ததுக்கு இதுதான் காரணம்.. கட்&ரைட்டா பேசிய பேட்டிங் கோச்

சுருக்கம்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் ஷாபாஸ் நதீம் அறிமுகமாகியுள்ளார்.   

கடைசி டெஸ்ட் போட்டி நடந்துவரும் ராஞ்சி ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமானது என்பதால், ஒரு ஃபாஸ்ட் பவுலரை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இடது கை ஸ்பின்னர் நதீம் அணியில் சேர்க்கப்பட்டார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் குல்தீப் யாதவ் இருக்கிறார். ஆனால் தோள்பட்டை காயம் காரணமாக அவரால் ஆடமுடியவில்லை. அதனால்தான் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குறிப்பாக நதீமை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் விளக்கமளித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள விக்ரம் ரத்தோர், நதீம் முதல் தர கிரிக்கெட்டில் 424 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். தொடர்ச்சியாக உள்நாட்டு போட்டிகளில் நன்றாக வீசிவருகிறார். அதுமட்டுமல்லாமல் இது அவரது சொந்த ஊர் மைதானமும் கூட. அதனால் இந்த கண்டிஷனை பற்றி இன்னும் நன்றாக தெரிந்த வீரர். தேர்வாளர்கள் தான் நதீமை தேர்வு செய்தார்கள். நதீம் சரியான தேர்வுதான் என்று விக்ரம் ரத்தோர் தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!