டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அபாரமான சாதனை.. ரோஹித் - மயன்க் - கோலி சேர்ந்து படைத்த சாதனைகளின் லிஸ்ட்

By karthikeyan VFirst Published Oct 20, 2019, 2:05 PM IST
Highlights

ரோஹித் சர்மா - மயன்க் அகர்வால் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளனர். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் 39 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணியை ரோஹித்தும் ரஹானேவும் சேர்ந்து தூக்கி நிறுத்தினர். 

ரஹானே 115 ரன்களிலும், இரட்டை சதமடித்த ரோஹித் சர்மா 212 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி மெகா ஸ்கோரை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் இந்திய வீரர்கள் சதங்களை வாரி குவித்துவிட்டனர். ஒவ்வொரு போட்டியிலுமே ஒரு இரட்டை சதம் மற்றும் ஒரு சதம் அடிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் மயன்க் அகர்வால் இரட்டை சதமும் ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமும் அடித்தார். இரண்டாவது போட்டியில் விராட் கோலி இரட்டை சதமும் மயன்க் அகர்வால் சதமும் அடித்தனர். இந்த போட்டியில் ரோஹித் இரட்டை சதமும் ரஹானே சதமும் அடித்துள்ளனர். 

இந்த தொடரில் இந்திய வீரர்கள் செய்த சாதனைகளைன் பார்ப்போம். 

1. ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய தொடக்க வீரர்கள் அதிக சதமடித்தது இந்த தொடரில்தான். இந்த தொடரில் இதுவரை ரோஹித்தும் மயன்க் அகர்வாலும் இணைந்து 5 சதங்களை அடித்துள்ளனர். இதற்கு முன்னர் 1971 மற்றும் 1979 ஆகிய இரண்டு முறையும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய தொடக்க வீரர்கள் தலா 4 சதங்களை அடித்துள்ளனர். 2010ம் ஆண்டு இலங்கைக்கு எதிராகவும் இந்திய தொடக்க வீரர்கள் 4 சதங்களை அடித்துள்ளனர். அவற்றையெல்லாம் முறியடித்து ரோஹித்தும் மயன்க்கும் இணைந்து 5 சதங்களை அடித்துள்ளனர். இன்னும் ஒரு இன்னிங்ஸ் மீதமுள்ளது. 

2. ஒரே டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் மூன்று இரட்டை சதங்களை அடித்திருப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னதாக 1955/56ல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வினூ மன்கத் 2 இரட்டை சதங்களும் பாலி உமர்கர் ஒரு இரட்டை சதமும் என மொத்தம் 3 இரட்டை சதங்களை அடித்திருந்தனர். அதன்பின்னர் தற்போதுதான் இந்திய வீரர்கள் ஒரே தொடரில் மூன்று இரட்டை சதங்களை அடித்துள்ளனர். 

3. இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் அடிப்பதும் இது இரண்டாவது முறை. ஏற்கனவே 2016-17ல் இங்கிலாந்துக்கு எதிரான அடுத்தடுத்த போட்டிகளில் கோலியும் கருண் நாயரும் இரட்டை சதமும் அடித்தனர். அதற்கு அடுத்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் கோலி இரட்டை சதமடித்தார். இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டது. தற்போது மயன்க் அகர்வால்-கோலி-ரோஹித் ஆகிய மூவரும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக இரட்டை சதங்களை அடித்துள்ளனர். 
 

click me!