தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு போறது உறுதி.. காலிறுதி போட்டி விவரங்கள்

By karthikeyan VFirst Published Oct 18, 2019, 1:34 PM IST
Highlights

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. லீக் சுற்று நேற்றுடன் முடிந்தது. 
 

லீக் சுற்றில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிய தமிழ்நாடு அணி, ஒரு தோல்வியை கூட பெறாமல் அனைத்து போட்டிகளிலும் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதி போட்டிகள் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. 

தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, மும்பை, குஜராத், சத்தீஸ்கர், டெல்லி, பஞ்சாப் ஆகிய 8 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 20ம் தேதி 2 காலிறுதி போட்டிகளும் 21ம் தேதி 2 காலிறுதி போட்டிகளும் நடக்கவுள்ளன. 

20ம் தேதி கர்நாடகா மற்றும் புதுச்சேரி அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. அதேநாளில் மற்றொரு காலிறுதி போட்டியில் டெல்லி அணியும் குஜராத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள ஜஸ்ட் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடக்கிறது. 

21ம் தேதி நடக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் தமிழ்நாடு அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. அந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ளது. மும்பை மற்றும் சத்தீஸ்கர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜஸ்ட் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடக்கவுள்ளது. 

விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணி அபாரமாக ஆடிவருவதால் பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி. தமிழ்நாடு அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக், சீனியர் வீரர் முரளி விஜய், அபினவ் முகுந்த் ஆகியோருடன் இளம் வீரர்களான பாபா அபரஜித், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான் ஆகியோரும் அபாரமாக ஆடிவருகின்றனர். எனவே தமிழ்நாடு அணி இந்த முறை விஜய் ஹசாரே டிராபியை வெல்வதற்கான வாய்ப்பு அருமையாக உள்ளது. 

click me!