திசாரா பெரேரா ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த வீடியோ..! கிரிக்கெட் வரலாற்றில் முதல் இலங்கை பேட்ஸ்மேன் திசாரா

Published : Mar 29, 2021, 07:18 PM ISTUpdated : Mar 29, 2021, 07:22 PM IST
திசாரா பெரேரா ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த வீடியோ..! கிரிக்கெட் வரலாற்றில் முதல் இலங்கை பேட்ஸ்மேன் திசாரா

சுருக்கம்

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் திசாரா பெரேரா 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்த வீடியோவை பார்ப்போம்.  

கிரிக்கெட் வரலாற்றில் 9 வீரர்கள், தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். இதில், இப்போது இந்த சாதனையை படைத்துள்ள இலங்கை வீரர் திசாரா பெரேரா தான் 9வது வீரர். 

இதற்கு முன்,  இலங்கையில் நடந்த லிஸ்ட் ஏ போட்டியில் இலங்கை ஆர்மி அணிக்காக ஆடிய திசாரா பெரேரா, ப்ளூமிங் கிரிக்கெட் கிளப்புக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசினார்.

41 ஓவர்கள் போட்டியாக நடந்த அந்த போட்டியில் கடைசி 20 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் பேட்டிங் ஆட வந்தார் திசாரா பெரேரா. 39வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த திசாரா பெரேரா, அடுத்ததாக அவர் எதிர்கொண்ட 40வது ஓவரின் 2 பந்தில் சிக்ஸர் விளாசியதுடன், அந்த ஓவரின் எஞ்சிய 4 பந்திலும் சிக்ஸர் விளாசினார். தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசி 13 பந்தில் 52 ரன்களை விளாசினார் திசாரா பெரேரா.

இதன்மூலம், கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் விளாசிய 9வது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் திசாரா பெரேரா.

இதற்கு முன், சர் கார்ஃபீல்டு சோபர்ஸ்(1968), ரவி சாஸ்திரி(1985), ஹெர்ஷல் கிப்ஸ்(2007), யுவராஜ் சிங்(2007), ரோஸ் வைட்லி(2017), ஹஸ்ரதுல்லா சேசாய்(2018), லியோ கார்ட்டர்(2020), பொல்லார்டு(2021) ஆகிய 8 வீரர்கள் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க பட்டியலில் திசாரா பெரேராவும் இணைந்துள்ளார். கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை அடித்த முதல் இலங்கை வீரர் திசாரா பெரேரா தான். இதற்கு முன் எந்த இலங்கை வீரரும் இந்த சாதனையை படைத்ததில்லை.

இலங்கையில் நடந்த லிஸ்ட் ஏ போட்டியில் இலங்கை ஆர்மி அணிக்காக ஆடிய திசாரா பெரேரா, ப்ளூமிங் கிரிக்கெட் கிளப்புக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசினார்.

41 ஓவர்கள் போட்டியாக நடந்த அந்த போட்டியில் கடைசி 20 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் பேட்டிங் ஆட வந்தார் திசாரா பெரேரா. 39வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த திசாரா பெரேரா, அடுத்ததாக அவர் எதிர்கொண்ட 40வது ஓவரின் 2 பந்தில் சிக்ஸர் விளாசியதுடன், அந்த ஓவரின் எஞ்சிய 4 பந்திலும் சிக்ஸர் விளாசினார். தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசி 13 பந்தில் 52 ரன்களை விளாசினார் திசாரா பெரேரா.
 
PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!