ரியல் மேட்ச் வின்னர்; அவரு இல்லாமல் இந்திய அணியே இல்லை..! இளம் வீரருக்கு இயன் பெல் புகழாரம்

By karthikeyan VFirst Published Mar 29, 2021, 7:08 PM IST
Highlights

ரிஷப் பண்ட் இல்லாத இந்திய அணியை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் இயன் பெல் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட். தோனிக்கு அடுத்த இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், கெரியரின் தொடக்கத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அவ்வப்போது சொதப்பியதால், அவர் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. அதனால் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி, மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பெற்றார்.

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிய ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிராகவும் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடினார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் சதமடித்து, அதே தன்னம்பிக்கையுடன் டி20 கிரிக்கெட்டில் அசத்தினார்.

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆடாத ரிஷப் பண்ட், 2வது போட்டியில் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்களையும், 3வது போட்டியில் 62 பந்தில் 78 ரன்களையும் குவித்தார்.

இந்திய அணியின் மேட்ச் வின்னராக ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ள நிலையில், ரிஷப் பண்ட் இல்லாத இந்திய அணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என்று இயன் பெல் தெரிவித்துள்ளார்.

ரிஷப் குறித்து பேசியுள்ள இயன் பெல், ரிஷப் பண்ட்டுக்கு மிக அருமையான தொடராக இங்கிலாந்துக்கு எதிரான தொடர் அமைந்தது. 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடினார். பெரிய ஷாட்டுகளை மட்டுமே ஆடாமல், முதிர்ச்சியுடன் சிங்கிள் ரொடேட் செய்தும் அடிக்கத்தகுந்த பந்துகளை அடித்தும் சிறப்பாக ஆடினார். பவுலர் சிறு தவறு செய்தாலும், அடித்து காலி செய்துவிடுவார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த சதம் அவரது தன்னம்பிக்கையை அதிகரித்தது.

ரிஷப் பண்ட் இல்லாத இந்திய அணியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இந்திய அணியின் எதிர்காலம் இவர்தான். அரிதினும் அரிதான திறமை ரிஷப் பண்ட். ரிஷப்பின் வெற்றிகரமான கிரிக்கெட் கெரியருக்கு இதுதான் தொடக்கம். அவரது பேட்டிங்கை பார்ப்பதே கண்கொள்ளா காட்சி. ரியல் மேட்ச் வின்னர் ரிஷப் என்று இயன் பெல் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!