ஒரே ஓவரில் 6 சிக்ஸர் என்ற சாதனை: கிரிக்கெட் வரலாற்றில் 9வது வீரர் திசாரா பெரேரா

Published : Mar 29, 2021, 05:01 PM IST
ஒரே ஓவரில் 6 சிக்ஸர் என்ற சாதனை: கிரிக்கெட் வரலாற்றில் 9வது வீரர் திசாரா பெரேரா

சுருக்கம்

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இலங்கை வீரர் திசாரே பெரேரா தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசி மிரட்டியுள்ளார்.  

இலங்கையில் நடந்த லிஸ்ட் ஏ போட்டியில் இலங்கை ஆர்மி அணிக்காக ஆடிய திசாரா பெரேரா, ப்ளூமிங் கிரிக்கெட் கிளப்புக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசினார்.

41 ஓவர்கள் போட்டியாக நடந்த அந்த போட்டியில் கடைசி 20 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் பேட்டிங் ஆட வந்தார் திசாரா பெரேரா. 39வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த திசாரா பெரேரா, அடுத்ததாக அவர் எதிர்கொண்ட 40வது ஓவரின் 2 பந்தில் சிக்ஸர் விளாசியதுடன், அந்த ஓவரின் எஞ்சிய 4 பந்திலும் சிக்ஸர் விளாசினார். தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசி 13 பந்தில் 52 ரன்களை விளாசினார் திசாரா பெரேரா.

இதன்மூலம், கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் விளாசிய 9வது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் திசாரா பெரேரா.

இதற்கு முன், சர் கார்ஃபீல்டு சோபர்ஸ்(1968), ரவி சாஸ்திரி(1985), ஹெர்ஷல் கிப்ஸ்(2007), யுவராஜ் சிங்(2007), ரோஸ் வைட்லி(2017), ஹஸ்ரதுல்லா சேசாய்(2018), லியோ கார்ட்டர்(2020), பொல்லார்டு(2021) ஆகிய 8 வீரர்கள் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ: சிஎஸ்கே முன்னாள் வீரர் ருத்ரதாண்டவம்.. 2வது ஓடிஐயில் இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து!
IND vs NZ: அதிரடி வீரர் கணித்தபடியே 2வது ஓடிஐயில் சொதப்பிய ரோகித், விராட் கோலி.. யார் சாமி இவரு!