சிக்ஸரா அடிச்சு தள்ளுற; உன் பேட்டை கொடு பார்ப்போம்.! ஷர்துல் தாகூரின் பேட்டை வாங்கி பார்த்த ஸ்டோக்ஸ்.. வீடியோ

Published : Mar 29, 2021, 04:20 PM IST
சிக்ஸரா அடிச்சு தள்ளுற; உன் பேட்டை கொடு பார்ப்போம்.! ஷர்துல் தாகூரின் பேட்டை வாங்கி பார்த்த ஸ்டோக்ஸ்.. வீடியோ

சுருக்கம்

ஷர்துல் தாகூர் சிக்ஸர்களாக விளாச, மிரண்டுபோன பென் ஸ்டோக்ஸ், தாகூரின் பேட்டை வாங்கிப்பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  

இந்தியா  - இங்கிலாந்து இடையேயான 3வது ஒருநாள் போட்டி நேற்று புனேவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி தவான்(67), ரிஷப் பண்ட்(78) மற்றும் ஹர்திக் பாண்டியாவின்(64) அதிரடி அரைசதங்களால் 50 ஓவரில் 329 ரன்களை குவித்தது.

330 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் சாம் கரன் 95 ரன்கள் அடித்து தனி நபராக கடைசி வரை போராடினாலும், மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்காததால் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 322 ரன்கள் அடித்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் ஷர்துல் தாகூர் சிறப்பாக பேட்டிங் ஆடினார். ஹர்திக் பாண்டியா 40வது ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 265 ரன்களாக இருந்தபோது ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இந்திய அணி 329 ரன்களை எட்ட முக்கிய காரணம் ஷர்துல் தாகூரின் பேட்டிங் தான்.

அதிரடியாக ஆடிய தாகூர் 21 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் அடித்தார் ஷர்துல் தாகூர். ஆனால் 46வது ஓவரிலேயே ஆட்டமிழந்துவிட்டார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடியிருந்தால் இந்திய அணியின் ஸ்கோர் இன்னும் அதிகரித்திருக்கும். 

சிறப்பாக பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த ஷர்துல் தாகூர், ஸ்டோக்ஸ் வீசிய 45வது ஓவரின் 4 பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். இதையடுத்து ஷர்துல் தாகூரின் பேட்டை சிரித்துக்கொண்டே விளையாட்டாக வாங்கி பார்த்தார் ஸ்டோக்ஸ். தாகூரும் அவரது பேட்டை ஸ்டோக்ஸிடம் கொடுத்தார். அதை பார்த்துவிட்டு தாகூரிடம் கொடுத்தார் ஸ்டோக்ஸ். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!
Vaibhav Suryavanshi: '700 ரன்கள் அடிப்பேன்னு முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்'.. ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!